அதோமுகம் என்ற பழந்தமிழ் வார்த்தைக்கு மறைத்து வைத்திருக்கும் முகம் என்று பொருள். மனிதர்கள்மறைத்து வைத்திருக்கும் கோர முகங்கள் சில சமயங்களில் வெளிவரும் போது எந்தவிதமான வினோதங்கள், அசம்பாவிதங்கள் நிகழ்கிறது என்பதை அதோமுகம் புதிய கோணத்தில் திரைப்படமாக வடிவமைத்துள்ளனர். கதையின் நாயகனாக சித்தார்த் எஸ். பி. கதையின் நாயகி சைத்தன்யா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் அனந்த் நாக், சரித்திரன், நக்லைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் அருண்பாண்டியன் நடித்திருக்கிறார். *******
ஊட்டி, குன்னூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் கதைகளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். மலைகள், குளிர், மிஸ்ட் ஆகியவையுடன் தொழில்நுட்பத்துடன் கூடிய படமாக உருவாகியுள்ளது. கதாநாயகன் தனது மனைவியின் கைத்தொலைபேசியில் அவருக்கு தெரியாமல் ஒரு மென்பொருள் இணையத்தை பொறுத்தியதால் அவனது வாழ்க்கை தலைகீழாக மாறுவது தான் கதை. இதைசுற்றி பல திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையை வடிவமைத்து அதோமுகம் படத்தை உருவாக்கியுள்ளார்கள்.
இத்திரைப்படத்தின் இயக்குனர் சுனில் தேவ், ஒளிப்பதிவு அருண் விஜயகுமார், எடிட்டர் விஷ்ணு விஜயன், பின்னணி இசை சரண் ராகவன், பாடல்கள் மணிகண்டன் முரளி என புதுமுக தொழில்நுட்ப நிபுணர்கள் இணைந்து இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதுவரை பட வினியோக வியாபாரத்தில் இருந்து வந்த ரீல் பெட்டி நிறுவனம் தரிகோ பிலிம் நிறுவனத்துடன் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
நடிகர்கள் : எஸ்.பி.சித்தார்த், சைதன்ய பிரதாப், அருண் பாண்டியன், மாத்யூ வர்கீஸ், ஆனந்த் நாக், J S கவி, பிபின்குமார், சரித்திரன் படக் குழுவினர்: எழுத்து & இயக்கம்: சுனில் தேவ் ஒளிப்பதிவு: அருண் விஜய்குமார் பாடல்கள்: மணிகண்டன் முரளி பின்னணி இசை: சரண் ராகவன் கலை இயக்குனர்: சரவணா அபிராமன் படத்தொகுப்பு: விஷ்ணு விஜயன் ஒலி வடிவம்: திலக்ஷன் (Noise Nexus) ஒலி கலவை: T. உதயகுமார் (Knack Studios) ஒப்பனை: நரசிம்மா, அம்மு பி ராஜ், சுப்ரமணி (அருண் பாண்டியன்) பாடல்: சுனில் தேவ் கிராபிக்ஸ்: Fix It In Post Studios கலரிஸ்ட்: K. அருண் சங்கமேஸ்வர் வண்ணம்: Firefox Studios மக்கள் தொடர்பு – ஆர்.குமரேசன்