செங்கல்பட்டு மாவட்டம் இன்று (02.02.2024) நந்திவரம்–கூடுவாஞ்சேரி நகராட்சியில் ரூ.192.00 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22ன்கீழ் வார்டு எண்.13ல் சர்வேஎண்.260, ல் புரனமைக்கப்பட்ட தாங்கல் குளம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்
க.செல்வம், செங்கல்பட்டு சட்டமான்ற உறுப்பினர் .வரலட்சுமி மதுசூதன் ஆகியோர் முன்னிலையில் மாவட்டஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குறு,சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பொதுமக்கள்பயன்பாட்டிற்க்கு திறந்துவைத்தார்.
இந்த தாங்கல் குளம் சுமார் 5.00 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குளம் பராரிப்பின்றிபொது சுகாதாரத்திற்கு கேடுவிளைவிக்கும் வகையிலும், தனிநபர்களின் அத்துமீறல் காரணமாகவும்மக்கள் பிரதிநிதிகள் மேற்படி பொதுமக்கள் மற்றும் புனரமைப்பு பணி கேட்டுக்கொண்டதிற்கிணங்கமுடிக்கப்பட்டுள்ளது. இக்குளத்தை சுற்றி முள்வேளி அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதை மற்றும் அதன்ஓரங்களில் 150 எண்ணிக்கையிலான மரங்கள் நடப்பட்டுள்ளது. புதியதாக ஆழ்துளை கிணறுஅமைக்கப்பட்டு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. புதியதாக சீரமைக்கப்பட்டுள்ள இக்குளத்தினைஅப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போதுநந்திவரம்–கூடுவாஞ்சேரி நகரமன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக், மறைமலைநகர் நகரமன்றதலைவர் சண்முகம், நந்திவரம்–கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர் தாமோதரன் ஆகியோர்உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி, பிரதிநிதிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22ன்கீழ் செங்கல்பட்டு மாவட்டம் இன்று (02.02.2024) நந்திவரம்–கூடுவாஞ்சேரி நகராட்சியில் ரூ.192.00 இலட்சம் மதிப்பீட்டில் புரனமைக்கப்பட்ட தாங்கல்குளம் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு திறந்து வைத்து பேசியதாவது…நந்திவரம் அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் கூடுவாஞ்சேரி அரசு ஆரம்பப்பள்ளி கூடுதல் கட்டிடம் ரூ 70 லட்சம்மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. எல்.இ.டி லைட் ரூ 2 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டிலும், நந்திவரம்ஏரி ரூ 6 கோடி மதிப்பீட்டில் புரனமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. விரைவில் வீடுகள்தோறும் குடிநீர் வழங்கப்பட உள்ளது. மேலும் மகளீருக்கு கட்டணமில்லா பேருந்து மூலம்நாள் தோறும் 42 லட்சம் மகளீர் பயனடைகின்றனர். வண்டலூர் வட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடம் ரூ 3 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில்கட்டப்பட்டுவருகிறது. அறிவுசார் மையம் ரூ 1 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. எரிவாயு தகன மேடை ரூ ஒரு கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. அரசு பெண்கள்மேல்நிலைபள்ளியில் கூடுதல் கட்டம் 3 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது என்றுபேசினார்.