ஆர்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ஆதித்தியா இயக்கத்தில் விதார்த், திருகுன், பூர்ணா, சுபஶ்ரீ ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “டெவில்“. பூர்ணாவின் கணவன் விதார்த். விதார்த்தும் சுபஶ்ரீயும்வ் கள்ள தொடர்பில் இருப்பதை பூர்ணா பார்த்துவிடுகிறாள். அதனால் தனியாக வாழ்கிறாள் பூர்ணா. ஒரு விபத்தில் பூர்ணாவுக்கும் திருகுன்னுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலர்களாக மாறுகிறார்கள். கணவனுக்கு துரோகம் செய்ய விரும்பாத பூர்ணா திருந்தி வந்த கணவன் விதார்த்தோடு சேர்ந்து வாழ்கிறாள். ஒருநாள் இரவு பூர்ணாவும் திருகுன்னும் தனியாக பேசிக்கொண்டிருப்பதை விதார்த் பார்த்து விடுகிறார். இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். முடிவு என்ன என்பதுதான் மீதிக்கதை. கதாநாயகிக்காவே எடுக்கப்பட்ட படம். பூர்ணா நடிப்பின் உச்சத்திற்கே சென்று விட்டார். அபாரமான நடிப்பு. இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின்இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். படத்திற்கு மிஷ்கினின் இசை கதையின் ஓட்டத்தை வேகமாக்கியிருக்கிறது. மழையின் ஓசையையும் தவளையின் சப்தத்தையும் கடிதத்தாள் அசையும் சப்தத்தையும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். இவரின் அதிர்வூட்டும் இசைக்காகவே உச்சக்கட்டத்தில் பேய் காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மற்றபடி கதைக்கு பேய் காட்சிகள் ஒன்றிவரவில்லை.