லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதை மற்றும் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘லால் சலாம்‘ படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்ட ஐஸ்வரியா ரஜினிகாந்த் பேசும் போது, “ஒரு ஊரில் நடக்கும் தேர்த் திருவிழா அதையொட்டி நடக்கும் மட்டை பந்தாட்டப் போட்டி அந்த போட்டியில் நடக்கும் பிரச்சனைகளை சார்ந்து இந்த படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. விளையாட்டு வினையானால் எங்குபோய் முடியும் என்பதை இந்த படம் பேசுகிறது.*******
இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் கதாசிரியர் தன்னிடம் இரண்டு கதை கூறியதாகவும் அதில்ஒன்றுதான் லால் சலாம் என்றும் கூறினார். இந்தப் படம் மக்களைச் சார்ந்த ஒரு சிறிய அரசியல் கருத்தைபேசுவதாக கூறினார். குடிமகனாக இருக்கக்கூடிய அனைவருக்கும் அரசியலுடன் ஒரு பங்கு உள்ளது அரசியல்இல்லாமல் எந்த நாடும் ஜனநாயகமும் இயங்க முடியாது என்றும் கூறினார். அரசியல் என்பது எல்லாத்திலும்உள்ளது அதை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதில்தான் எல்லாமே உள்ளது என்று கூறினார்.மேலும் படத்தில் பணியாற்றிய மூத்த கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கும் தன்னுடைய சக தொழில்நுட்ப கலைஞர்களுக்கும்பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
நடிகர் விஷ்ணு விஷால் பேசும் பொழுது 15 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவு செய்த தருணத்தில் இந்தபடம் தனக்கு ஒரு பரிசாக கிடைத்திருப்பதாகவும் ‘சூப்பர் ஸ்டார்‘ ரஜினிகாந்த் அவர்களுடன் பலரும் நடிக்கஏங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர் நடிக்கும் படத்தில் அவர் அவருக்கு கீழ் ஒரு கதையின் நாயகனாகநடிப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். இக்கால கட்டத்திற்கு தேவையான கருத்தைகிரிக்கெட் மூலமாக இப்படம் பதிவு செய்வதாகவும் கூறினார். ஒரு இயக்குனராக இந்த கருத்தைபடமாக்குவதும் அப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற மிகப்பெரிய ஆளுமை இருப்பதும் மிகுந்தசவால் அளிக்கும் விஷயமாகும். அதை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் திறம்பட செய்து முடித்ததாகவும்கூறினார். பணிபுரிந்த அனைத்து கலைஞர்களுக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றிதெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.