ஆட்களை வைத்து அறிக்கை விடாமல் மக்களை நேரடியாக சந்திக்கவேண்டும் வேண்டும்” – விஜய்க்கு கே.ராஜன் அறிவுரை

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் இளையராஜாவின்1417வது படமாக உருவாகியுள்ள படம்  நினைவெல்லாம் நீயடா“. ‘ஆதிராஜன்  கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது: இப்போது வரை சூப்பர் ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் ஒரு புதிய கட்சியைத் தொடங்கி இருக்கிறார். தமிழ் திரையுலகம் சார்பில் அவரை வாழ்த்துகிறேன். அவர் வெற்றி பெற வேண்டும் என்றால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் செய்த தொண்டுகளில் 15 சதவீதமாவது செய்ய வேண்டும். மக்களிடம் இறங்கி வரவேண்டும். மேடையில் இருந்து கொண்டு புஷ்ஸி ஆனந்தை அறிக்கை விடச் சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 200 கோடி சம்பளத்தையும் வேண்டாம் எனக் கூறி மக்களுக்காக இறங்கிஇருக்கிறார் என்றால் உண்மையிலேயே அவர் நல்லது செய்வார் என நம்புவோம்”*******

ஆதிராஜன் நீண்ட நெடுங்காலமாகவே என்னுடைய தம்பியாக உடன் வருபவர். அவர்பத்திரிகையாளராக இருக்கும்போது சில புரட்சிகள் செய்தவர். நான் சில முறை ஜெயிலுக்குபோவதற்கும் அவர்தான் காரணம். ஒரு பத்திரிகையாளராக இருந்ததால் ஒரு படத்தின் தோல்விக்கானஅம்சங்கள் என்ன என்பதைத் தெரிந்துசிலந்திபடத்தை இயக்கி வெற்றி பெற்றார். ‘நினைவெல்லாம் நீயடாபடத்திற்கு இளையராஜா இசையமைக்கஒப்புக்கொண்டிருக்கும்போதே படம் எப்படி இருக்கும் என்பது பற்றி சொல்லத் தேவையில்லை. மரியாதை குறைவான தலைப்பாக இருந்தாலும் காதலின் நெருக்கத்தை சொல்வதற்கு பொருத்தமான தலைப்புதான். இப்படத்தில் இளம் ஜோடிகளைப் பார்க்கும்போதுஅலைகள் ஓய்வதில்லைகார்த்திக், ராதாவை பார்ப்பது போல இருக்கிறது. என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, “இங்கே சரியான தலைவர்கள் நிறைய பேர் இல்லை. விஜய் ஒரு நல்லதலைவராக வர வேண்டும் என எதிர்பார்ப்போம். நான் என்றுமே விஜய்யின் விசுவாசி தான். அவர் பெரியதலைவராக வரவேண்டும். இப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது எனக்குபன்னீர் புஷ்பங்கள்படம்ஞாபகத்திற்கு வந்துவிட்டது. நம்மை பள்ளி காலகட்டத்திற்கு அழைத்துச் சென்று விட்டது. இளையராஜாவின் 1417வது படம் இது. இந்த சாதனையை இசைஞானி ஒருவரால் தான் செய்ய முடியும். நாம் சோகமாக இருக்கும் போதெல்லாம் அவருடைய பாடல்களைக் கேட்டு ஆறுதல் அடைந்தோம். இன்று அவர் வீட்டில் துக்கம்.. ஆண்டவன் தான் அவருக்கு ஆறுதல் தரவேண்டும். படத்தில் நடித்துள்ளயுவலட்சுமிக்கு நடிகை சுவலட்சுமியின் குடும்பப் பாங்கான தோற்றம் அப்படியே இருக்கிறது. காதலித்துதோல்வி அடைந்தவர்கள் அப்படியே அந்த பசுமையான நினைவுகளுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். 20 வருடங்களுக்குப் பிறகு காதலியைப் போய் பார்க்கலாம் என்று நினைத்தால் உங்களுக்கு அவரதுதோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சி தான் கிடைக்கும். அதன் பிறகு மனதில் பசுமையான நினைவுகள்எதுவுமே வராதுஎன்று கூறினார்.

இயக்குநர் ஆதிராஜன் பேசும்போது, “இந்த படத்தில் முதன்முறையாக இளையராஜா சாருடன்பணியாற்றியுள்ளேன். இசைஞானியை அணுகுவதே கடினம் என்றும் அவருடன் எளிதாக பணியாற்றமுடியாது என்றும் சொல்வார்கள். ஆனால் அவருடன் இணைந்து பணியாற்றியபோது மிகவும் சவுகரியமாகஉணரும்படி எனக்கு இசையமைத்துக் கொடுத்தார் இளையராஜா. ஐந்து பாடல்களும் அற்புதமானபாடல்கள். யுவன் சங்கர் ராஜாவும் ஒரு பாடல் பாடியிருக்கிறார். மதுரையில் என்னுடைய நண்பரின்வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தான் இந்த காதல் கதையை உருவாக்கி உள்ளேன். இதில் 70 சதவீதம் உண்மை மற்றும் 30 சதவீதம் கற்பனை கலந்து கொடுத்திருக்கிறேன். எல்லோரும்பள்ளி பருவத்தைத் தாண்டி தான் வந்திருப்பார்கள். மண்ணுக்குள் போகும் வரை யாராலும் மறக்கமுடியாத ஒரு விஷயம் முதல் காதல். அதை வைத்து தான் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன்என்றுகூறினார்.

பிரஜின் கதாநாயகனாக நடிக்க, மனீஷா யாதவ் ஹீரோயினாக நடிக்கிறார்.  அப்பாபடப்புகழ்யுவலட்சுமி இளம் நாயகியாக அறிமுகமாகிறார்.  சினாமிகா இன்னொரு நாயகியாக அறிமுகமாகிறார்.  இளம் நாயகனாக ரோஹித் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மனோபாலா, மதுமிதா,  இயக்குநர்ஆர்.வி.உதயகுமார், முத்துராமன், பி.எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.