இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், புல்லங்குடி கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவ ராவ்,இ.ஆ.ப., அவா;கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாh;பாக பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணா;வு பணிகளை மேற்கொள்ள உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை சந்தித்து அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் தொடர்பாக 02.07.2020 அன்று ஆலோசனைகள் வழங்கினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தொpவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது உத்தரவின்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சாpக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் இதுவரை 12,126 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 952 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 243 நபர்கள் பூரண குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 697 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்குவதற்காக 2500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நோய் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ளவர்களுக்கு வைரஸ் தொற்று அறிகுறி உள்ளதா என்பதை கண்காணிப்பதற்கு சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் ஒவ்வொரு வீடாக களப்பணிகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் உத்தரவின்போpல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திட மருத்துவத்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் நேரம் பாராமல் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
இப்பணியின் தொடர்ச்சியாக பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக 100 சதவீதம் விழிப்புணர்வு ஏற்படுத்திட 11 ஊராட்சி ஒன்றியங் களில் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த 2,325 தன்னார்வலர்கள் மூலம் களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை தவிர்ப்பதற்கு உப்பு கலந்த நீரால் வாய் சுத்தம் செய்தல், ஆவி பிடித்தல் போன்று அவரவர் வீடுகளிலேயே கடைபிடிக்கக்கூடிய எளிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகாpத்திட சத்தான உணவு வகைகள், பழங்கள், பழச்சாறுகள் உட்கொள்வது குறித்தும், நோய் எதிர்ப்பு சக்தி உடைய மஞ்சள், மிளகு, இஞ்சி,
பு+ண்டு ஆகியவற்றை அதிகப்படியாக உணவில் சேர்த்துக் கொள்வது குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். குறிப்பாக தேவையற்ற பயணங்களை தவிர்த்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற தடுப்பு
நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொpவித்தார். இந்த ஆய்வின்போது, சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.சி.அஜித் பிரபுகுமார், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர்கள் திரு.கிருஷ்ணகுமார், திரு.சரவணபாண்டியன் உட்பட அரசு அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.