இமெயில் திரைப்பட விமர்சனம்

எஸ்.ஆர்.பிலீம் தயாரிப்பில் எஸ்.ஆர்.ராஜன் இயக்கத்தில் அசோக் குமார், ராகினி திவேதி, மனோபாலாஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் இமெயில். ஆன்லைன் சூதாட்டத்தில் ஆர்வம் கொண்டநாயகி ராகினி திவேதிக்கு தவறாக விளையாடினாலும கொரியர் மூலம் லட்சக்கணக்கில் பணம் வருவதால் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார். அசோக்குமாரை காதலித்து திருமணமும் செய்து கொள்கிறார். திருமணத்துக்குப் பிறகு ராகினியைகொலை செய்ய ஒரு கூட்டம் துரத்துகிறது. அவர்கள் யார்? ஏன் கொலை செய்ய துரத்துகிறார்கள்? என்பதை ராகினி திவேதி கண்டுபிடிப்பதுதான் கதை. ராகினி திவேதிதான் இப்படத்தின் முதன்மைகதாபாத்திரம். சண்டைக் காட்சிகளில் தூள் கிளப்புகிறார். அவருக்கு இணையாக அசோக் குமாரும்சண்டைக் காட்சியில் பிரமாதப் படுத்துகிறார். ஆன்லைன் சூதாட்டத்தால் வரும் தீய விளைவுகளை படம்பிடித்து காட்டியுள்ளார் இயக்குநர். படத்தின் முன்பகுதியைவிட பின்பகுதி விறுவிறுப்பாக செல்கிறது. காட்சிக்கு காட்சி எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்து இருக்கிறது. உச்சக்கட்ட காட்சியில் மர்ம முடிச்சிகள் அவிழ்க்கப்படுவதை ரசிக்கலாம்.