தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதியநூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்குநூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 174 தமிழறிஞர்களின் நூல்கள்நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 13.97 கோடி நூலுரிமைத் தொகைதமிழ்நாடு அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இதில் முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சிக்காலத்தில் மட்டும் 140 தமிழறிஞர்களின் நூல்கள்நாட்டுடையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு 9.71 கோடி நூலுரிமைத் தொகை ஒப்பளிப்புசெய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்பு நாளிதுவரை 17 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரியையர்களுக்கு ரூ.2.50 கோடிஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இலக்கிய இலக்கணப் படைப்புக்களாகவும் ஆய்வாகவும் தமிழன்னைக்குத்தொண்டறம் பூண்டு வாழ்ந்து மறைந்த ஐந்து தமிழறிஞர்களின் அனைத்துப் படைப்புகளையும் அறிவுப்பொதுவுடைமை செய்யும் வகையில் மறைந்த தமிழறிஞர்களான இலக்கியத் திறனாய்வர் இராவ் சாகேப்திரு. கு. கோதண்டபாணி பிள்ளை அவர்களின் அனைத்துப் படைப்புகளையும் (33 நூல்கள்) நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் மரபுரிமையர்களான திருமதி ஜா.ரா. புனிதவதி, திரு. கோவிந்தசுவாமிநாதன் அவர்களுக்கு நூலுரிமைக்கான தொகை ரூபாய் பத்து இலட்சத்திற்கானகாசோலையும், பேராசிரியர் முனைவர் இரா. மோகன் அவர்களின் அனைத்துப் படைப்புகளையும் (88 நூல்கள்) நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் வாழ்விணையரான பேராசிரியர் நிர்மலா மோகன்அவர்களுக்கு நூலுரிமைக்கான தொகை ரூபாய் பத்து இலட்சத்திற்கான காசோலையும், சொல்லாக்கஅறிஞர்
திரு. கோ. முத்துப்பிள்ளை அவர்களின் அனைத்துப் படைப்புகளையும் (8 நூல்கள்) நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் மரபுரிமையர்களான திரு. பா. எழிலரசு, திரு. பா. தமிழரசு, திருமதி த. அறிவரசி, திருமதி கோ. ஞானாம்பாள், திருமதி தே. தங்கம் ஆகியோருக்கு நூலுரிமைக்கானதொகை ரூபாய் பத்து இலட்சத்திற்கான காசோலையும், இதழியல் வல்லுநர் திரு. மா.சு. சம்பந்தன்அவர்களின் அனைத்துப் படைப்புகளையும் (10 நூல்கள்) நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின்மரபுரிமையர்களான திரு. மா.ச. இளங்கோவன், திரு மா.ச. மணிவண்ணன்,
திரு. மா.ச. உதயகுமார், திரு. மா.ச வெற்றிவேல், திரு மா.ச. செல்வகுமார் ஆகியோருக்குநூலுரிமைக்கான தொகை ரூபாய் பத்து இலட்சத்திற்கான காசோலையும், மகளிர் படைப்பாளராகியதிருமதி அம்சவேணி அவர்களின் அனைத்துப் படைப்புகளையும் (36 நூல்கள்) நாட்டுடைமையாக்கப்பட்டுஅவர்களின் வாழ்விணையரான முனைவர் கோ. பெரியண்ணன் அவர்களுக்கு நூலுரிமைக்கான தொகைரூபாய் ஐந்து இலட்சத்திற்கான காசோலையும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைஅமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சிமற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மரு. இல. சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர்ஔவை அருள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.