ஏ கியூப் மூவிஸ் ஆப் சார்பில் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடித்து தயாரித்திருப்பதுடன் ஜெய் சதீசன்நாகேஸ்வரன் என்ற தனது நிஜப் பெயரில் இயக்கிய படம் ஜெய் விஜயம். இதில் கதாநாயகியாக அக்ஷயாகொண்டமுத்து நடித்துள்ளார். இப்படத்தின் வெற்றி விழாவில் ஜெய் ஆகாஷ் பேசியதாவது: இப்படத்தை முதலில் ஏ கியூப் மூவிஸ் செயலியில் வெளியிட்டேன். எனக்கு உலகம் முழுவதும் 3 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். சினிமாவில் நடித்தபோது எனக்கு கிடைத்த ரசிகர்களும் ஜீ டிவியில் நீ தானேஎன் பொன் வசந்தம் தொடரில் நடித்தபோது ஆண்கள், பெண்கள் என லட்சக்கணக்கில் ரசிகர்கள. கிடைத்தனர். அனைவரும் என்னுடைய ரசிகர் மன்றத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். இனி நான் படங்கள் இயக்கப் போவதில்லை. முழுக்க நடிப்பில் கவனம் செலுத்த உள்ளேன்.**********
நான் ஏ கியூப்செயலியில் படம் வெளியிட்டால் அந்த படத்தை கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்து உடன. பார்த்து விடுவார்கள். பாசிடிவ் கமெண்ட் பகிர்வார்கள். அப்படித்தான் ஜெய் விஜயம் படத்துக்கு பாராட்டு குவிந்தது. அதை பார்த்து விட்டுத்தான். இப்படத்தை தியேட்டரில் வெளியிடுங்கள் என்று பலர் கூறினார்கள். சிறுமுதலீட்டு சங்கம் எனக்கு தியேட்டரில் படத்தை வெளியிட உதவியது. சரியான தியேட்டர்கள்கிடைக்கவில்லை. தியேட்டரில் எனக்கு லாபம் கிடைக்கவில்லை. ஆனால் என்னுடைய ஏ கியூப்செயலியில் படத்தை ரிலீஸ் செய்ததில் இரண்டரை கோடி சம்பாதித்துவிட்டேன். இதிலேயே எனக்குபட்ஜெட்டை விட இரு மடங்கு லாபம் கிடைத்துவிட்டது.
தியேட்டரில் சிறிய பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்ய மறுக்கிறார்கள். இப்போது தொழில் நுட்ப வளர்ச்சிஅதிகரித்து விட்டது. சினிமாவை தியேட்டரில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. படத்தை மக்களிடம்.கொண்டு போய் சேர்த்தால் போதும். படம் நன்றாக இருந்தால் அவர்கள் செயலியில்டவுன்லோட் செய்து பார்க்க தவறுவதில்லை. இனி சினிமா தியேட்டர்களில் பொங்கல், தீபாவளிக்குமட்டுமே பெரிய படங்கள் ரிலீஸ் ஆக வேண்டிய நிலை வரும். அது நன்றாக இருந்தால் மக்கள்பார்ப்பார்கள் இல்லாவிட்டால் பார்க்க மாட்டார்கள்.
ஜெய் விஜயம் படத்தை இயக்கி தயாரித்து நடித்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு நான் நடித்த படங்களில்எனக்கு வெற்றி படமாக ஜெய் விஜயம் அமைந்தது. அடுத்து அமைச்சர் ரிட்டர்ன் என்ற படத்தில்நடித்திருக்கிறேன். அதேபோல் மாமரம் படத்திலும் நடித்திருக்கிறேன் . இந்த இரண்டு படங்களுமேபெரிய பட்ஜெட் படம். அமைச்சர் ரிட்டர்ன் படத்தை நானே இயக்கி இருக்கிறேன். தயாரிப்பா ளர்கள்கேட்டுக் கொண்டதால் இயக்கினேன். கமர்ஷியல் படமாக நன்றாக வந்திருக்கிறது. இரண்டு படங்களும்அடுத்தடுத்து வெளியாக உள்ளது. ஜெய் விஜய் படத்தைப் பொறுத்த வரை பத்திரிகையாளர்களுக்கு
சிறப்பு காட்சி திரையிட்ட பிறகு அதற்கு அவர்கள் பெரும்பாலும் பாசிடிவான விமர்சனங்கள் தந்தனர். படத்தின் வெற்றிக்கு இது முக்கிய காரணமாக அமைந்தது. டிரெண்டிங் சினிமாஸ் நவ் வெப் சைட்டில்இதன் விமர்சனம் வெளியாகி என் பார்வைக்கு முதலாவதாக வந்தது. அந்த விமர்சனம் படத்தை நன்றாககூர்ந்து கவனித்து எழுதி எழுதப்பட்டிருந்தது. நான் கிளிசரின் போடாமல் கண்ணீர் விட்டு அழுத நடித்தகாட்சியை பாராட்டியதுடன் படத்தில் புகை மூட்டம் போன்ற ஒரு கதாபாத்திரம் வரும் அது ஏன் அப்படிபடமாக்கப். பட்டது என்பதையும் குறிப்பிட்டி ருந்தார்கள். நான் என்னவெல்லாம் உணர்ந்து படத்தைஎடுத்தேனோ அந்த உணர்வு முழுவதும் அந்த விமர்சனத்தில் இருந்தது.மேலும் ஜெய் விஜயம், ஜெய்ஆகாஷுக்கு ரீ என்ட்ரி என்று குறிப்பிடப்பட் டிருந்தது. அந்த வாக்கு பலித்து விட்டது. தற்போது 4 வெளிப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. வெவ்வேறு இயக்குனர்கள் இயக்குகிறார்கள்.
ஜெய் விஜயம் படத்தை தமிழ் யோகி, தமிழ் ராக்கர்ஸ் போன்றவற்றில் திருட்டுத்தனமாக டவுன்லோடுசெய்து வெளியிட்டிருந்தார்கள். அது எனக்கு கோபத்தை உண்டாக்கியது. ஆனால் என் நண்பர்கூறும்போது “உன் படத்தை ரசிகர்களும் மக்களும் பார்க்க விரும்புகிறார்கள் அதனால்தான் இதுபோன்றதிருட்டு இணைய தளத்திலும் படத்தை திருடி போட்டிருக்கி றார்கள். இது சினிமாவில் உனக்கு கிடைத்தவெற்றி” என்றார். அதை கேட்டு சந்தோஷப்பட்டுக் கொண்டேன்.
தமிழில் என் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தெலுங்கில் என் நடிப்பில் நிறைய சூப்பர்ஹிட் படங்கள் வந்திருக்கி ன்றன. இந்தியில் என் படங்கள் டப்பிங் ஆகி வரவேற்பு பெறுகிறது.
எல்லோரும் இங்கு வாழ்த்தும் போது நடிகர் ஜெய்சங்கர் போல் ஒவ்வொரு வெளிக் கிழமையும் ஜெய்ஆகாஷ் படம் வெளி வர வேண்டும் என்றார்கள். அந்த ஆசை எனக்கும் உள்ளது. நிறைய படங்களில் நான்நடிப்பேன். என் மீது அன்பும் ஆதரவும் காட்டும் ரசிகர்கள், ரசிகைகள் அனைவருக்கும் நன்றி.
ஜெய் விஜயம் பட வெற்றிக்கு காரணம் ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் தான். இவ்வாறு ஜெய் ஆகாஷ் பேசினார்.