செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செங்கல்பட்டு மாவட்டம், புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் இயங்கும் மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிதியிலிருந்து குவாரிகளினால் பாதிக்கப்பட்ட கிராமம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு லேசர் கண் புரை அறுவை சிகிச்சை வழங்குவதற்கான சிறப்பு கருவி கொள்முதல் செய்திடவும் (Phacoemulsification Machine) மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் பயிற்சி அளிப்பதற்கு செங்கல்பட்டு மாவட்ட மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ராஜஸ்ரீக்கு 2023-2024 ம் ஆண்டிற்கான நிதியில் ரூ.17,00,000/- ற்கான நிர்வாக அனுமதியினை மாவட்ட ஆட்சித் தலைவர்திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். இதன் மூலம் கண்புரை அறுவை சிகிச்சை பெறுவதற்கு சென்னை கண்மருத்துமனைக்கு செல்லாமல் காலதாமதம் இன்றி செங்கல்பட்டு மருத்துமனையிலேயே சிகிச்சை பெற்று பயன்பெறலாம் என பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் பாஸ்கர் உடனிருந்தார்.