ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் “ரணம் அறம் தவறேல்”. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய நடிகர் வைபவ் பேசும்போது, “சக்திவேலன் பேக்டரி சக்தி அவர்களுக்கு மிக்க நன்றி. சரஸ் மேனன் செய்திருக்கும் கதாபாத்திரம் யாருமே செய்ய மாட்டேன் என்று கூறினார்கள். ஷெரிஃப் எப்படி சம்மதிக்க வைத்தார் என்று தெரியவில்லை. தான்யா ஹோப் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு நன்றி. ஷெரிஃப் பற்றி இப்பொழுது தான் தெரியும். என்னிடம் யாரிடமோ வேலை பார்த்தேன் என்று தான் கூறினார். ஆனால் படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார். குறும்படம் எடுத்து இப்பொழுது மிகப்பெரிய இடத்தில் இருக்கும் இயக்குநர்கள் போல் ஷெரிஃப் வருவார். மது சாரை தமிழ் சினிமா உலகிற்கு வரவேற்கிறேன். உதய் என்னிடம் கணவன் மனைவி சண்டை போடுவது போல் சண்டை போடுவார். இன்று கூட ஒரு சண்டை நடந்தது.. ஒளிப்பதிவாளர் பாலாஜி அவர்களுக்கு நன்றி;. அவரின் பெயரை திரையில் பார்க்க வேண்டும் என்று விரும்பிய அவர் மனைவி இன்று உயிரோடு இல்லை.********
தாஸ் ரவி முக்கியமான கதாபாத்திரத்தில்நடித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். படத்தில் பெண் கதாபாத்திரங்கள் வலிமையானகதாபாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. உலகத்தில் இப்படி எல்லாம் நடக்குமா…? என்றுஅனைவரும் வியந்து போய் பார்ப்பார்கள்.. தளபதி படத்தின் கதை எனக்கு என்னவென்று தெரியாது. ஏனென்றால் வெங்கட் பிரபு சரோஜா காலத்தில்இருந்தே எனக்கு கதை சொல்லியது கிடையாது. ரஜினி சாருடனும் நடிக்க வாய்ப்பு அமைந்தால் மிகவும்சந்தோசமாக இருக்கும். எனக்கு எப்போதும் வரவேற்பு கொடுத்து வரும் நீங்கள் இப்படத்திற்கும் ஆதரவுகொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.
இயக்குநர் ஷெரீஃப் அவர்கள் பேசும் போது, அனைவருக்கும் என் முதல் வணக்கம். டிரைலர் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்றுநம்புகிறேன். கடைசியாக பேசுவதால் என்ன பேச என்று தெரியவில்லை. ஏனென்றால் என்ன பேசநினைத்திருந்தேனோ அதை முன்னாள் வந்தவர்கள் அனைவரும் பேசிவிட்டார்கள். நானும் பாலாஜியும்தான் இப்படத்தை துவங்கினோம். வேறொரு படத்தை துவங்கலாம் என்று நினைத்த போது லாக்–டவுன்துவங்கியது. புராஜெக்ட்டும் முடிந்து போனது. வாழ்க்கையில் அடி மேல் அடி.. அப்படி இருக்கும் போதுஒரு செய்தி கண்ணில்பட்டது.. இது குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு வேண்டும் என்கின்ற எண்ணத்தில்இக்கதையை பேசலாம் என்று முடிவு செய்து ஆத்திச்சூடியில் இருக்கும் அரணை மறவேல் என்கின்றவரிகளை டைட்டிலாக வைத்தோம்..கருத்து சொல்வது போல் இல்லாமல் நேர்மையாக ஒரு படத்தைஎடுக்க வேண்டும் என்று விரும்பினோம். நமக்கு மெச்சூரிட்டி வந்தப் பின்னர் வாழ்க்கையில் வாழ்ந்துமுடிக்கும் முன்னர் கண்டிப்பாக அறம் தர்மம் செய்வதற்கு ஒரு வாய்ப்பு வரும். அந்த அறம் தர்மம் என்பது தானம் மட்டுமல்ல; உண்மைக்காக குரல் கொடுப்பது; அநியாயத்தைஎதிர்ப்பது. இது எல்லாமே தர்மம் மற்றும் அறம் தான். அதை நாம் யோசிக்காமல் செய்யவேண்டுமென்பதை வலியுறுத்தியே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வீடியோ காலில் தான் கதைசொன்னேன். ஒரு வாரத்தில் ஓகே செய்து அக்ரிமெண்ட் சைன் செய்தேன். இதற்காக தயாரிப்பாளர் மதுசார் அவர்களுக்கு நன்றி., வைபவ் சார் கதை கேட்டவுடன் ஒரு இயக்குநர் பேரைச் சொல்லி இதுபோலவா..? என்று கேட்டார். நானும் ஆர்வக் கோளாறில் ஆமாம் என்று சொல்லிவிட்டேன். அவர்தற்போது படம் பார்த்துவிட்டார். அவருக்குப் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். அவருக்கு நன்றி. கலை இயக்குநர் விழா படத்தில் இருந்தே எனக்கு நல்லப் பழக்கம். அவருக்கும் நன்றி. எனக்குஉறுதுணையாக இருந்த செல்வம், பாலாஜி, உதய் ஆகியோருக்கு நன்றி. இசையமைப்பாளர் அரோல்கரோலி அவர்களுக்கு நன்றி., அவரின் பின்ணனி இசை பேசப்படும். பிற நடிகர் நடிகைகள்அனைவருக்கும் நன்றி. எங்கள் படம் பற்றி பாசிட்டிவ் ஆக பேசிக் கொண்டிருக்கும் சுரேஷ் சக்ரவர்த்திசார் அவர்களுக்கு நன்றி. பிள்ளைகளின் வெற்றி தான் பெற்றோரின் வெற்றி என்று கருதுகிறேன். ஏனென்றால் பெற்றோருக்குதனிப்பட்ட வெற்றிகள் என்று ஏதும் கிடையாது. என் மனைவி, என் அம்மா, என் தங்கை என ஒட்டுமொத்தமாக என் குடும்பத்திற்கு மிக்க நன்றி. சில குறிப்பிட்ட இயக்குநர்களிடம் இருந்து வருபவர்கள்தான் சாதிக்க முடியும் என்று தவறான கருத்தாக்கம் இருக்கிறது. அது உண்மை இல்லை பொய் என்றுநிருபிக்க விரும்பினோம்,. எங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி.