கே.ஆர்.ஜி.ஸ்டுடியோவுடன் ஒன்றிணையும் இயக்குனர் அஞ்சலி மேனன்

கன்னட திரையுலகில் தடம் பதித்துஆற்றல் மிக்க திரைப்பட தயாரிப்பு, விநியோகஸ்த நிறுவனமாகவிளங்கும் கே.ஆர்.ஜி. ஸ்டுடியோஸ், தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குனர் அஞ்சலி மேனனுடன்இணைந்து தனது முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பை அறிவிக்கிறது. தனித்துவமான கதைசொல்லும்உத்தியை கையாளும் இயக்குநர் அஞ்சலி மேனனின் முந்தைய படைப்புகளானபெங்களூர் டேஸ்‘, ‘மஞ்சாடிக்குரு‘, ‘உஸ்தாத் ஹோட்டல்‘, ‘கூடேஆகிய திரைப்படங்களும், சமீபத்தில் வெளியானஒண்டர்வுமன்ஆகிய திரைப்படமும் அனைத்து தரப்பினராலும் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. தனது படைப்புகளில் முத்திரை பதிக்கும் அஞ்சலி மேனன் இம்முறை கே.ஆர்.ஜி. ஸ்டுடியோஸ் உடன்இனைகிறார்,*********

திரைப்பட தயாரிப்பு, விநியோகஸ்த நிறுவனமான KRG முதல் முறையாக தமிழில் திரைப்பட தயாரிப்பில்அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில், அஞ்சலி மேனனுடன் இணைந்து தனது முதல் படைப்பைதமிழில் எடுப்பதில் உவகை கொள்கிறது, கன்னட திரைத்துறையிலும் அதற்கு அப்பாலும் கதை சொல்லுதலில் உள்ள இடைவெளிகளைக்குறைக்க கவனம் செலுத்தும் இவ்வேளையில், KRG நிறுவனம், இயக்குனர் அஞ்சலி மேனனின்நேர்த்தியான கதை சொல்லுதலின் மூலம் கதை சொல்லும் மரபை சீரமைக்க உள்ளது. 2017ல் KRG தனது திரைப்பட விநியோக வணிகத்தை தொடங்கி இதுவரை 100ற்கும் மேற்பட்டதிரைப்படங்களை வெற்றிகரமாக விநியோகித்து வருகிறது. மேலும் KRG நிறுவனம் தன்னை ஒருதிரைப்படத்தின் கருவாக்கம் முதல் உருவாக்கம் வரை 2020 முழு நேர தயாரிப்பு நிறுவனமாகஉருவெடுத்துக்கொள்கிறது. KRG தனது ஆரம்ப கால வெற்றியை ரோஹித் படக்கி இயக்கத்தில்தனஞ்ஜெய் நடித்து Amazon Primeல் வெளியானரத்னன் பிரபன்ஜாதிரைப்படத்தின் மூலம்சூடிக்கொண்டது குறிப்பிடத்தக்கதுஅந்த ஆரவாரமான வெற்றிக்கு பிறகு KRG தனது பயணத்தை2023 மார்ச் மாதத்தில் வெளியானகுருதேவ் ஹொய்சாலாமூலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.