‘வித்தைக்காரன்’ திரைப்பட விமர்சனம்

சென்னை,பிப்.26- கே.விஜய்பாண்டி தயாரிப்பில் வெங்கி இயக்கத்தில் சதீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்வித்தைக்காரன்‘. ஒன்றாக இருந்த மூன்றுவில்லன்கள் பகைவர்களாகி  தங்கம் வைரம் ஹவாலா பணம் என தனித்தனியாக கடத்தல்தொழில் செய்கிறார்கள். இவர்களின் கடத்தல் தொழிலுக்கு கதாநாயகன் சதீஷ் உதவுகிறார். ஏன் உதவிசெய்கிறார் கடத்தல் பொருட்கள் எங்கேபோய் சேர்கிறது என்பதுதான் கதை. நகைச்சுவை நடிகராகவலம்வந்த சதீஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அலட்டிக்கொள்ளாத நடிப்பில் சதீஷ் வருகிறார்நடக்கிறார் ஓடுகிறார் நிற்கிறார் அவ்வப்போது சிரிக்கிறார். படத்தின் முன்பகுதி புரியாதபுதிராக படம்நகர்கிறது. பின்பகுதிதான் பார்வையாளர்களை ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது. அதற்கு முழுக்காரணம்ஆனந்த்ராஜின் முதிர்ச்சியான நடிப்புதான். படத்தின் இடைவேளக்குப் பிறகுதான் திரைக்கதைசூடுபிடிக்கிறது. விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரி வைத்திருக்கும் ரூ.25 கோடி மதிப்புள்ளவைரத்த கைப்பற்ற நடக்கும் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது.