இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகம், டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும்ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழக மாணவர்களுக்கு (மானக் மித்ரா) இளைஞர்கள்–இளைஞர்கள்இணைப்பு பிரச்சாரத்திற்கான பயிற்சி நிகழ்ச்சியை இன்று நடத்தியது. பயிற்சி நிகழ்ச்சியை இத்திய தரஅமைவனத்தின் திரு. ஜீவானந்தம், மற்றும் ஸ்ரீ தினேஷ் ராஜகோபாலன், நடத்தினர். பயிற்சி நிகழ்ச்சிக்குப்பிறகு, டாக்டர் கோபாலகிருஷ்ணன், பேராசிரியர் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனபல்கலைக்கழகம் மற்றும் திரு. D. ஜீவானந்தம். இணை இயக்குநர், பல்கலைக்கழக வளாகத்தில் தரஇணைப்பு பிரச்சாரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த மானக் மித்ராக்கள் /இளைஞர்கள், முழுமையாக பிஐஎஸ் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை இளைஞர்கள்/பொது நுகர்வோர்களுடன்பகிர்ந்து கொள்வார்கள்.
இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவுமற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இதுபொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளிநகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும்நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
BIS பல்வேறு பல்வேறு தரநிலைகளை மேம்படுத்துதல் நடவடிக்கைகள் மூலம் தொழில்கள், அரசு, கல்வித்துறை மற்றும் நுகர்வோர் இடையே தரநிலைகள் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவித்துவருகின்றது. உலக நுகர்வோர் உரிமை தினத்தை மனதில் கொண்டு, நுகர்வோர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக, BIS ஆனது நுகர்வோருடன் நேரடி இணைப்பு முறையில் தரம் குறித்த பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. மானக் மித்ரா என்று அழைக்கப்படும் இளைஞர் தன்னார்வலர்களின் நெட்வொர்க் மூலம் இந்த பிரச்சாரம்மேற்கொள்ளப்படுகிறது. இந்த தன்னார்வலர்கள் BIS செயல்பாடுகள், நுகர்வோர் பாதுகாப்பில் BIS இன்பங்கு பற்றிய தகவல்களை மாணவர்கள், இளைஞர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். இது அவர்களுக்குப்பொருந்தும் வகையில் BIS திட்டங்களின் நன்மைகள் மற்றும் பலன்களைப் பெறவும், தேவைப்படும்போது, பரிச்சயத்துடனும் எளிதாகவும் பல்வேறு அம்சங்களைப் பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்குஅதிகாரம் அளிக்கும்.