சென்னை பெருநகர காவல் ஆணையாளர், பணி ஓய்வு பெறுகின்ற 1 கூடுதல் காவல் துணை ஆணையாளர், 1 உதவி ஆணையாளர் உட்பட 30 காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்

சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த C.ஜெயசிங், கூடுதல் காவல் துணைஆணையாளர், மத்திய குற்றப்பிரிவு, M,அசோக் குமார், உதவி ஆணையாளர், பெண்கள்மற்றும் குழந்தைகளு க்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு (CAWC), போக்குவரத்து காவல்ஆய்வாளர்கள் .G.முருகேசன், B.வெங்கடேசன், 10 காவல் உதவி ஆய்வாளர்கள், 13 சிறப்பு உதவி ஆய்வாளர்கள்,  1 தலைமைக் காவலர், 1 இளநிலை உதவியாளர்மற்றும் 1 அலுவலக உதவியாளர் என 2 அமைச்சுப் பணியாளர்கள் என மொத்தம் 30 காவல்அலுவலர்கள்  (29.02.2024) பணி ஓய்வு பெறுகின்றனர். (29.02.2024) வேப்பேரி, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்றபணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், .கா.., சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து ஓய்வு பெறுகின்ற 30 காவல்அலுவலர்கள், சுமார் 25 ஆண்டுகள் முதல் 39 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டி, தமிழக காவல்துறைக்கும், சென்னை பெருநகர காவல்துறைக்கும் பெருமை சேர்த்ததைநினைவு கூர்ந்து, சால்வை மற்றும் மாலை அணிவித்து, சான்றிதழ்கள் வழங்கினார்.

காவல் ஆணையாளர் அவர்கள், ஓய்வு பெற்ற காவல் குடும்பத்தினரிடம், காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்தமைக்காக நன்றி தெரிவித்தார். மேலும், ஏதேனும் உதவிகள்தேவைப்பட்டாலோ அல்லது குறைகள் தெரிவிக்க விரும்பினாலோ தன்னை நேரில் சந்தித்து முறையிடலாம் என காவல் ஆணையாளர் அவர்கள் ஓய்வு பெற்ற காவல் அலுவலகர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், காவல் கூடுதல் ஆணையாளர் (மத்தியகுற்றப்பிரிவு),.P.K.செந்தில்குமாரி, .கா., காவல் இணை ஆணையாளர், (தலைமையிடம்), A.கயல்விழி, .கா.., காவல் துணை ஆணையாளர்கள் V.R.சீனிவாசன்(நிர்வாகம்) திரு.A.மணிவண்ணன் (தலைமையிடம்), காவல் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்றகாவல் அலுவலர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.