“அரிமாபட்டி சக்திவேல்” திரைப்பட விமர்சனம்

அஜித், பவன் தயாரிப்பில் ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் சார்லி, பவன், மேக்னா எலன், இமாம்அண்ணாச்சி, பிர்லா போஸ், அழகு, சூப்பர் குட் சேதுபதி, ஜெயச்சந்திரன் ஆகியோரின் நடிப்பில்வெளிவந்திருக்கும் படம்அரிமாபட்டி சக்திவேல்’.  ஜாதி வெறியும் அதில் சிக்கித் தவிக்கும் காதலர்களையும் எடுத்துச் சொல்லுவதுதான் கதை.  திருச்சிக்கு அருகே உள்ள அரிமாபட்டி என்ற கிராமத்தில் வாழ்கிறவர் பவன்.  இவர் அவரை விட  உயர்ந்தஜாதி பெண்ணை  காதலித்து திருமணமும் செய்து கொள்கிறார்.  இதை அந்த ஊர்காரர்கள்எதிர்க்கிறார்கள் மணப்பெண் மேக்னா எலனின்  அண்ணன் பிர்லா போஸ் மிகக் கடுமையாக எதிர்க்கிறார்.  முடிவு என்ன ஆனது என்பதை மெல்ல மெல்ல கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ரமேஷ்கந்தசாமி.  அப்பாவாக நடித்திருக்கும் சார்லி மிகவும் அருமையாக நடித்துள்ளார்.  கதாநாயகன் பவன்நடிப்பதற்கு இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.  நாயகி மேக்னா எலன்  புன்னகையால்ரசிகர்களை கவருகிறார். இமான் அண்ணாச்சியின் நகைச்சுவை ஆங்காங்கே வெடித்திருக்கிறது.   இதைஒரு உண்மை சம்பவமாக கதையை முடித்திருக்கிறார் இயக்குனர். நாமும் நம்புவோமாக.