தமிழ்நாட்டுக்(க அடுத்தபடி தமிழைப் போற்றும்
தமிழர்களுள் முன்னணியில் *மலேசி யத்துத்*
*தமிழர்களே முன்னிற்கும்* அடிப்ப டையில்
தமிழகத்துப் பெருங்கவிஞர் *வைர முத்து*
தமிழ்நூலாம் *மகாகவிதை* வெளியீட் டிற்குத்
தனியழைப்பை விடுத்ததுடன் அன்னா ருக்குத்
தமிழ்விருதாய் *பெருந்தமிழ்* என் கின்ற பேரில்
*தமிழ்நெஞ்சர் சரவணனார்* வழங்கல் நன்றாம் !
*வைரமுத்தை அழைக்காதீர் !* அவரும் இந்து
மதவெறுப்பை ; சனாதனத்தின் எதிர்ப்பை இன்று
தைரியமாய்க் காட்டுகிறார் என்றே இங்கே
தவறாகக் கருத்துரைக்கும் சில்லோர் ஒன்றாய்
வரிந்துகட்டி நிற்பதனைத் தமிழ றிந்தோர்
வரவேற்று வாழ்த்துரைக்க மாட்டார் ! ஏனாம் ?
வைரமுத்து தமிழ்க்கவிஞர் என்ப தால்தான்
வரவேற்கப் படுகின்றார் ! மதத்தால் அல்ல !
மதத்துக்கும் நாட்டுக்கும் அப்பாற் பட்ட
மனத்தோடு தமிழ்மொழியில் கவிதை பாடும்
விதத்தைத்தான் சரவணனார் போற்றும் வண்ணம்
விழாவெடுத்து வைரமுத்து கவிதை நூலாம்
அதனைத்தான் அறிமுகம்செய் கின்றார் ; ஆனால் ,
அது,தவறே என்றுசொல்லி எதிர்ப்ப வர்கள்
மதம்பிடித்த யானைகளா ? அல்ல வென்றால்
வண்டமிழ்க்குப் பகைவர்களா ? தமிழீர் ஆய்வீர் !
தமிழ்க்கவிதை அறுவைசெய்ய உரிய தன்று ;
தகவாக அனுபவிக்க உரிய தொன்றே !
தமிழறிஞ ருடன்மற்ற மொழியா ருஞ்சொல்
தக்கதொரு முடிவாம்,இம் முடிவுக் கேற்பத்
தமிழுக்கு வளம்சேர்க்கும் ஒருவர் தம்மின்
தனிப்பட்ட வாழ்க்கைதனை ஆய்தல் தீதே !
தமிழ்நலத்துக்(கு) அவர்செய்த செழிப்பை மட்டும்
தனித்துவமாய் அனுபவித்தால் அதுவே நேர்மை !
பாரதியார் முதற்கொண்டு வைர முத்து
படைத்துள்ள இலக்கியத்தை ஆய்தல் விட்டு
பாரினிலே தனிப்பட்ட அவர்கள் வாழ்வைப்
பகுத்தாய்தல் தேவையற்ற வெட்டி வேலை !
நேரடியாய்ச் சொல்கின்றேன் ; வைர முத்தை
நினைவினிலும் வெறுப்பதையும் விடுத்தே உங்கள்
ஊரில்தமிழ்ப் பள்ளியில்கற் போர்,*எண் ணிக்கை*
*உயர்வதற்கே என்னவழி ?* யோசி யுங்கள் !
*பாதாசன்*