*இந்தியரே இந்தியர்க்குச்* *சத்துரு ஆகியதால்தான்…!*

சீரழிந்து கிடக்கின்ற *ஒற்று மையைச்*

    செழித்தோங்கச் செய்வதற்கு வழிகா ணாமல்

பேரழியா திருக்கின்ற *மித்ரா* வுக்காய்ப்

      பெருந்திட்டம் வரைவதற்கே *அமைச்சர் டத்தோ*

*ஆரொன்அ கோடகாங்* முனைந்துள் ளாராம் !

        அமைச்சருடை அறிவிப்போ நம்நெஞ் சுள்ளே

நேரத்தை வீணடிக்கும் செயலாய்த் தோன்றும் ;

           நிம்மதியைச் சிதறடிக்கும் வேட்டாய்க் காணும் !

இந்தியர்க்காய் அன்றையநாள் *இண்ட்ராப்* தந்த

    பெருந்திட்டத் தின்முடிவும் என்னா யிற்றாம் ?

இந்தியர்க்காய் * . . கா . தலைவர் சுப்ரா*

      இயற்றியதோர் அருந்திட்டம் எங்கேஎங்கே ?

இந்தியர்தம் பெருந்திட்டம் *இரண்டை* யார் ; யார்

       எங்கெங்கே போட்டார்கள் ? இன்று மீண்டும்

முந்திநின்று *மித்ரா* வின் மூலம் போடும்

       *மூன்றாம்திட் டத்தாலே* எதுதான் ஆகும் ?

கைக்குள்ளே வெண்ணெய்தனை வைத்துக் கொண்டு

        கால்போன போக்கினிலே நெய்யைத் தேடும்

*சைக்கோ* போல் செயல்படுதல் தேவை தானா ?

        தனக்கொன்றும் தெரியாது  *மித்ரா* பற்றி

எக்கருத்தும்என்றமைச்சர் கூறி விட்டே

      இதையறிய *பட்டறையும்* நடக்கும் என்றார் ;

முக்கியமாய்  *இனிமேல்தான் இந்தி யர்தம்*

    *முழுச்சிக்கல்* யாவையெனத் தெரியும் என்றார் !

தேர்தலிலே வாக்களித்தார் இந்தி யர்க்காய்ச்

      செய்திடுவோம் பல,என்றே வாக்கைப் பெற்றுத்ச்

தேர்தலிலே வென்றபினர் *இந்தி யர்யார் ?*

     தெரியாதே ; தெரிந்தாலும் அவர்கட் கென்றே

ஓர்உதவி *மித்ரா* வின் மூலம் செய்ய

     உடனடியாய் முடியாதாம் ; ஆய்வு செய்தே

ஓரறிக்கை தயாரித்த பின்னர் தானே

        உதவியெனில் அநியாயம் அநியா யந்தான் !

                                                   

மித்ராவின் *தலைவரவர் பிரபா* என்றே

      மேற்போக்காய் அறிவித்து விட்டே பின்னர்

மித்ராவின் தலைவரைப்போல் *டத்தோ ஆரோன்*

      வேடமிடல் எதற்காக ? *பிரபா* தம்மை

*மித்ரன்* போல் கருதி,அவர் முதுகில் குத்தல்

      விவேகமுள்ள செயல்தானா ? இந்தி யர்கள்

*சத்துருவாய்* இந்தியர்க்கே  ஆன தால்தான்

      சங்கடங்கள் தொடர்ந்துபல வருமே காண்பீர் !

                                                                    *பாதாசன்*