உதவி ஆணையாளர்கள் திரு.ராஜ்குமார் சாமுவேல், தீவிர குற்றத்தடுப்பு பிரிவு (தெற்கு), திரு.ராயப்பன் ஏசுநேசன், தீவிர குற்றத்தடுப்பு பிரிவு (வடக்கு), திரு.ரமேஷ் (அரும்பாக்கம் சரகம்), ஆகியோர் தலைமையில்காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் திருமங்கலம் பகுதியில் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு, குற்றச்செயலில் ஈடுபடுவதற்காக ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 1.ஜெயபால், 2.சொக்கலிங்கம் (எ) சுரேஷ், 3.முத்துகுமார் (எ) மதன், 4.துரைராஜ், 5.ராஜ்பிரகாஷ் காட்வின் (எ) ராஜ்குமார்(எ) தம்பிதுரை உள்ளிட்ட 20 குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 4 கைத்துப்பாக்கிகள், 84 தோட்டாக்கள், 11 கத்திகள் மற்றும் 5 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒரு Air Gun, ஒருகைதுப்பாக்கி மற்றும் ஒரு DBBL Gun-ம் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் மேற்படி எதிரிகள் தங்களது எதிரிகளை பழிவாங்குவதற்காக துப்பாக்கிகள் மற்றும்ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததும், காவல் குழுவினர் தக்க சமயத்தில் மேற்படி எதிரிகளை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், காவல் குழுவினரின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் நிகழாமல்தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் மேற்படி வழக்கில்குற்றவாளிகளை கைது செய்த உதவி ஆணையாளர்கள் திரு.ராஜ்குமார் சாமுவேல் தீவிர குற்றத்தடுப்பு பிரிவு(தெற்கு) (SCS/South), திரு.ராயப்பன் ஏசுநேசன், தீவிர குற்றத்தடுப்பு பிரிவு (வடக்கு), திரு.ரமேஷ்(அரும்பாக்கம் சரகம்) மற்றும் காவல் ஆய்வாளர்கள் திரு.சசிராஜன் (SCS/கிழக்கு மண்டலம்), திரு.பார்த்திபன்(SCS/மேற்கு மண்டலம்), திரு.ரத்தினகுமார் (V-5 திருமங்கலம்/குற்றப்பிரிவு), உதவி ஆய்வாளர்கள்திரு.கண்ணதாசன், திரு.முகமது இம்தாதுல்லா, திருமதி.சாந்தி, தலைமைக் காவலர்கள் திரு.மலைவேல், கண்ணன், கார்த்திக், சுந்தர், அபிலாஷ், சங்கர், முதல்நிலைக் காவலர்கள் திரு.சரவணன், வீரமணி, சிவராமன், காவலர்கள் திரு.வினோத்குமார், பாலாஜி, அருண், இர்பான், பூவேந்தன், பிரபு, பார்த்திபன், திருநாவுக்கரசு, கதிரவன் மற்றும் ஜெகன் ஆகிய 29 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை இன்று (15.03.2024) நேரில்அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.