காதல் திரைக்காவியம் “அழகி” மறுவெளியீடு

தமிழ் திரையுலக வரலாற்றில், உதயகீதா சினி கிரியேஷன்ஸ் உதயகுமார் வழங்கும், உதயகீதாவின்அழகிமிகமுக்கியமான திரைப்படமாக அனைவராலும் கொண்டாடப்பட்டு மாபெரும் தாக்கத்தையும் திரையுலகில்திருப்புமுனையையும் ஏற்படுத்தியது. இப்படம் மீண்டும் திரையரங்குகளை வரும் 29ம் தேதிபுத்தம் புதுப்பொலிவுடன்அலங்கரிக்க வருகிறது.********


தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராகக் கோலோச்சிய தங்கர் பச்சான் முதல் முறையாக எழுதி இயக்கியதிரைப்படம் அழகி. 2002 ஆம் ஆண்டு பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடிப்பில் வெளிவந்தது. தங்கர்பச்சான் தன் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், தானெழுதியகல்வெட்டுஎனும்சிறுகதையை மையப்படுத்தி, இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருந்தார்.  இளையராஜாவின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது.

முதல் காதல் என்பது எல்லோருக்கும் ஸ்பெஷலானது.  முதல் காதல் சாகும் வரையிலும் மனதோடு ஒட்டியிருக்கும், பள்ளிக்காலத்தின் முதல் காதல், வாழ்வில் எப்போதும் உடன் வரும்.  அப்படியான  முதல்காதலியை ஒருவன் சந்திக்க நேரிட்டால் என்னவாகும் என்பது தான் இப்படத்தின் கதை.