புதுதில்லி, ஜூலை 03, 2020. கொவிட்-19 தொடர்பான ஆயத்தப்பணிகளை ஆய்வுச் செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்தை, மத்திய அமைச்சரவை செயலர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இன்று நடத்தினார். கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60 விழுக்காட்டை கடந்து விட்டது. இன்று இது 60.73 விழுக்காடாகும். இது வரை 3,79,891 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து, சீராக அதிகரித்து கொண்டே வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 20,033 கொவிட்-19 நோயாளிகள் குணமாகி யுள்ளனர். மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங் களுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொவிட்-19 நோயாளிகள் குணமடையும் எண்ணி்க்கை அதிகரித்தவாறு உள்ளது. இன்றைய நிலவரப்படி, கொவிட்-19 தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 1,52,452 அதிகமாகும். தற்போது 2,27,439 நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள். கொவிட்டை கண்டறியும் பரிசோதனைச் சாலைகளை அரசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது 1074, கொவிட்-19 பரிசோதனைச் சாலைகள் நம் நாட்டில் உள்ளன. இதில் அரசு பரிசோதனைச் சாலைகள் 775, தனியார் பரிசோதனைச் சாலைகள் 299. நிகழ்நேர பிசிஆர் (Real Time – RT PCR) அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 579 (அரசு : 366 + தனியார் : 213), ட்ரூனேட் (TrueNat) அடிப்படையிலானச் சோதனைச் சாலைகள்
405 (அரசு : 376 + தனியார் : 29) CBNAAT அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 90 (அரசு : 33 + தனியார் : 57) ஆகும். பரிசோதனை செய்வதும் அதிகரித்துக் கொண்டே யிருக்கிறது. மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 93 லட்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,41,576 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 92,97,749 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்த அனைத்து உண்மையான மற்றும் அண்மைத் தகவல்களுக்கு https://www.mohfw.gov.in/ and @MoHFW_INDIA என்ற இணையதளங்களைத் தவறாமல் பார்க்கவும்.