சென்னை, அசோக்நகர், காமராஜர் சாலை 89வது தெருவில் வசித்து வரும் அப்போலின்தாஸ், வ/55, த/பெ.அருளப்பன் என்பவர் வடபழனி பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். அப்போலின்தாஸ் கடந்த 18.03.2024 அன்று இரவு சுமார் 10.00 மணியளவில், பணம்எடுப்பதற்காக, கே.கே.நகர், பி.டி.ராஜன் சாலையில் உள்ள HDFC வங்கி ஏடிஎம் மையத்திற்குள் சென்றபோது, ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.500 நோட்டுகள் சில இருந்ததை கண்டார். அப்போலின்தாஸ் அந்த பணத்தை எடுத்து எண்ணி பார்த்தபோது, ரூ.18,000/- இருந்துள்ளது. பின்னர் ஏடிஎம் மையத்திற்கு யாரும் பணம் கேட்டு வராததால், அப்போலின்தாஸ் மேற்படி ரூ.18,000/- பணத்தை R-7 கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேற்படி பணத்தின் உரிமையாளரை கண்டுபிடிப்பதற்காக, R-7 கே.கே.நகர் காவல் நிலையகாவல் குழுவினர் மேற்படி வங்கியில் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் மேற்படி சம்பவத்தில்ஏடிஎம் மையத்தில் கண்டெடுத்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த அப்போலின்தாஸை இன்று(21.03.2024) நேரில் அழைத்து அவரது நேர்மையை பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.