தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு–ஒகேனக்கல், மைசூர்–பெங்களுர், குற்றாலம், நவக்கிரக கோவில்கள் தொகுப்பு மற்றும் மூணார் என மூன்று நாட்கள்செல்லும் சுற்றுலா, அறுபடை வீடு முருகன் கோவில்கள் செல்லும் நான்கு நாட்கள் சுற்றுலா, திருப்பதி, சென்னை–மாமல்லபுரம், காஞ்சிபுரம்– மாமல்லபுரம், திருவண்ணாமலை, ஶ்ரீபுரம் தங்க கோவில், புதுச்சேரி எனஒரு நாள் சுற்றுலா, எட்டு நாட்கள் பயணம் செய்யும் தமிழ்நாடு சுற்றுலா, கோவா–மந்த்ராலயம் சுற்றுலா பயணதிட்டங்களும், 14 நாட்கள் பயணம் செய்யும் தென்னிந்திய சுற்றுலா, யுனெஸ்கோ நிறுவனத்தால்அங்கீகரிக்கப்பட்ட பழமையான பண்பாட்டு சின்னங்களை பார்வையிடும் சுற்றுலா பயண திட்டம் உள்ளிட்டபல்வேறு வகையான சுற்றுலா பயண திட்டங்கள் பொதுமக்களின் வசதிக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சுற்றுலா பயண திட்டங்களை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் குளிர்சாதனவசதியுடன் கூடிய வால்வோ சொகுசு பேருந்துகள், உயர்தர சொகுசு பேருந்துகள், சாதாரண சொகுசுபேருந்துகள், 18 இருக்கைகளுடன் கூடிய சிறிய ரக சொகுசு பேருந்துகள், என மொத்தம் 16 சொகுசு பேருந்துகளை இயக்கி வருகிறது.
3 நாட்கள் சுற்றுலா செல்லும் நவக்கிரக கோவில்கள் சுற்றுலா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்தில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைஇரவு 10.30 மணிக்கு புறப்படும் பேருந்து திருக்கடையூர் ஓட்டல் தமிழ்நாடு சென்ற பின்னர் முதலாவதாக நாகைமாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் (செவ்வாய் தலம்), நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் (புதன் தலம்), மயிலாடுதுறைமாவட்டம் கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி திருக்கோயில் (கேது தலம்), புதுச்சேரி மாநிலம் காரைக்கால்மாவட்டம் திருநள்ளாறு அருள்மிகு தர்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் (சனி தலம்), திருவாரூர் மாவட்டம்ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் (குரு தலம்) ஆகிய கோயில்களுக்கு சென்று இரவுதஞ்சாவூர் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதியில் சுற்றுலா பயணிகள் தங்க வைக்கப்படுவார்கள்.
ஞாயிற்றுக்கிழமை காலை தஞ்சாவூர் மாவட்டம் திங்களூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் (சந்திரன்தலம்) தொடங்கி, திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் (ராகு தலம்), தஞ்சாவூர்மாவட்டம் திருமங்கலக்குடி சூரியனார் கோவில் (சூரியன் தலம்), கஞ்சனூர் அருள்மிகு அக்னீஸ்வரர்திருக்கோயில் (சுக்கிரன் தலம்) ஆகிய இடங்களுக்கு சென்று சுற்றுலா பேருந்து மறுநாள் திங்கட்கிழமைகாலை 5.00 மணிக்கு சென்னை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.
மேற்கண்ட அருள்மிகு திருக்கோயில்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள இந்து சமய அறநிலையத்துறையின் www.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று, திருக்கோயில்கள் பகுதியில்பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com இணைதள பக்கத்தில் முன்பதிவு செய்தோ, அல்லது சென்னைவாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகமானசுற்றுலா வளாகத்திற்கு நேரில் வருகை தந்தோ முன்பதிவு செய்யலாம்.
சுற்றுலா குறித்த மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லாதொலைபேசி எண் 180042531111 மற்றும் 044-25333333, 044-25333444 ஆகிய தொலைபேசிஎண்களை தொடர்பு கொண்டும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் விவரங்களை பெறலாம்.