*விவேகா னந்தர் ஆசிரமம்*
வெற்றுக் கட்டடம் அல்ல ; அதில்
*விவேகா னந்தர் ஆன்மபலம்*
விதைக்கப் பட்டே உள்ளதுவாம் !
விவேகா னந்தர் ஆசிரமம்
*பிரிக்பீல்ட்ஸ் இந்தியர்* வரலாற்றை
விவேகத் துடனே விளம்புவதாய்
வீற்றி ருக்கும் சின்னமன்றோ !
*மரபியல் தகுதி* அதற்கில்லை ;
மாநகர் மன்றம் சொல்கிறதாம் !
அரசியல் இதிலே கலவாமல்
ஆன்மீ கத்தின் உயிர்கலந்தால்
மரபியல் தகுதி ஆசிரம
வாசல் தேடி வந்துவிடும் !
பெருமை மிக்க ஆசிரமம்
பிழைத்தே என்றும் நிலைத்துவிடும் !
அழகு *மாநகர்* பெறும்,அந்த
ஆசிர மத்தை இந்தியர்கள்
இழந்தால் தானே என்பவர்கள்
இங்கே அதுவும் நிலைத்தால்தான்
அழகு மாநகர்க்(கு) என்பதுடன்
அந்த மரபியல் தகுதிதனை
இழக்கா திருக்கச் செய்வதற்கே
இந்திய ரே,வழி கண்டிடுக !
எல்லா வகையிலும் இந்தியர்க்கே
எத்தனை இடர்கள் வந்திடினும்
எல்லா வகையிலும் சிறந்துள்ள
நல்லா சிரமம் நிலைக்கவழி
இல்லை என்பதை ஏற்றிடவே
இந்தியர் ஒப்பார் ; இதையுணர்ந்தே
வல்ல அரசே *ஆசிரம*
*வாழ்நாள் நீளும்* படிசெய்க !
*பாதாசன்*