அண்மையில் நடைபெற்ற 16வது எடிசன் திரைப்பட விருது விழாவில் கவிஞர் பொத்துவில் அஸ்மினின் ‘ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்‘ சிறந்த உணர்ச்சி பூர்வமான பாடல் (Best Sensational Song -2023) விருதினைப் பெற்றுள்ளது.‘ நான்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தப்பெல்லாம் தப்பே இல்லை‘ பாடல் மூலம் தமிழ் சினிமாவில்அறிமுகமான பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் இப்பாடலை எழுதியுள்ளார். பாடலை பிரபல இலங்கை இசையமைப்பாளர் சனுக்க இசையமைக்க இலங்கையை சேர்ந்த பிரபல பாடகி விண்டி பாடியுள்ளார். ********
இலங்கையில் அதிக பார்வைகளை ஈர்த்த முதல் இலங்கை தமிழ் பாடல் என்றபெருமையை இப்பாடல் பெற்றுள்ளது. இவ்விருதினை பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், இசையமைப்பாளர்சனுக்க, பாடகி விண்டி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இயக்குநர் மனோஜ் பாரதிராஜா, சென்னைக்கான ஆஸ்திரேலியா கவுன்சிலர் டேவிட் ஆகியோர் விருதை வழங்கினர்.
எல்லாத் தளங்களிலும் சுமார் ஆறுகோடி பார்வைகளை சென்றடைந்துள்ள ஐயோசாமி பாடலினைகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு இலட்சம் அதிகமான ரீல்ஸ் வீடியோக்களை செய்துவெளியிட்டுள்ளனர்.
இன,மொழி, தேசம் கடந்து ‘ஐயோ சாமி‘ பாடலினை பலரும் கொண்டாடி வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.