விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியிருந்த திரைப்படம் ஹாட் ஸ்பாட். மார்ச் 29 ஆம் தேதி வெளியான இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா, படக்குழுவினர் கலந்துகொள்ள சென்னையில் நசந்தது. இந்நிகழ்வில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசியதாவது… இந்தப்படம் இந்த நிலையில் இருக்க மிக முக்கிய காரணம் பத்திரிகையாளர்கள்தான் என்றார். இப்படத்தின் 2ஆம் பாகம் தாயாராகிறது.******
அவ்வளவு நெகட்டிவிடிபரவிய பிறகு, பிரஸ் ஷோவின் போது, மிகப்பதட்டமாக இருந்தேன். ஆனால் நீங்கள் கைதட்டிப் பாராட்டியதுஉண்மையிலேயே மிக சந்தோசமாக இருந்தது. நல்ல படம் என்றால் நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்பது இதன்மூலம் நிரூபணமானது. இன்னொரு வேண்டுகோள், திரையரங்கில் இப்போது படம் நன்றாகபோய்க்கொண்டிருக்கிறது. ஆனால் வீக் டெஸில் தியேட்டரில் ஹவுஸ்ஃபுல் ஆனால் தான் அடுத்த வாரம் ஷோதருகிறார்கள், ஆனால் வார நாட்களில் பெரிய ஹீரோக்ளுக்கே கூட்டம் வராது. இந்த நிலை மாற வேண்டும். நீங்கள் ஆதரவு தந்தால் அடுத்த வாரமும் படம் ஓடும். எல்லோருக்கும் நன்றி. அடுத்த வருடம் ஹாட் ஸ்பாட் 2 வோடு, எங்கள் குழுவோடு உங்களைச் சந்திக்கிறோம் நன்றி.