தயாரிப்பாளர் ஜெயந்தன் தனது ஃப்ரைடே எண்டர்டெயின்மென்ட் (பிரான்ஸ்) மூலமாக திரைப்படத் தயாரிப்பில்முதல் முயற்சியாக தயாரித்த படம் ‘டிராக்டர்.’ ஃப்ரைடே எண்டர்டெயின்மென்ட் இந்தியாவில் உருவாகும் அனைத்து மொழி திரைப்படங்களையும் பிரான்சில்உள்ள திரையரங்கு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் ஜெயிலர் ஜவான் முதல் லியோ வரைஅனைத்து மொழி திரைப்படங்களையும் பிரான்சில் உள்ள திரையரங்குகளில் வெளியிட்டுள்ளது.*********
இந்த திரைப்பட குழுவினர் பெரும்பாலும் அறிமுக கலைஞர்கள்.இந்த திரைப்படத்தின் இயக்குனர் ரமேஷ் யந்த்ரா ஏற்கனவே “குடியம் குகைகள்” மற்றும் “இந்தியதொல்பழங்காலத்தின் தந்தை” ஆகிய ஆவணப்படங்களால் அறியப்பெற்றவர் மற்றும் அவர் சென்னை ஓவியக்கல்லூரியின் முன்னாள் முதுகலை மாணவர் ஆவார். இது அவரது முதல் திரைப்படம் மற்றும் அவர் தகவல்தொழில்நுட்பத் துறையில் இருந்து வந்தவர்.
இயக்குனரைப்போலவே இந்தப் படத்தின் நாயகன் பிரபாகரன் ஜெயராமன் மற்றும் நாயகி ஸ்வீதா பிரதாப் இருவரும் ஐடி துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் இருவரும் திரைப்படத்திற்குபுது முகங்கள். துணை கதாபாத்திரத்தில் பிள்ளையார்பட்டி ஜெயலட்சுமி மற்றும் இயக்குனர் ராம்சிவாஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் கௌதம் முத்துசாமி, பிரபல ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவின்உதவியாளர், சுதர்சன் படத்தொகுப்பாளராகவும், ஒலி வடிவமைப்பை ராஜேஷ் சசீந்திரன் மற்றும் தயாரிப்புவடிவமைப்பை பிரபல கலை இயக்குனர் டி.முத்துராஜ் செய்துள்ளார்கள். இந்த டிராக்டர் திரைப்படம் தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவின் அதிகாரப்பூர்வ தேர்வில்பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
டிராக்டர் படத்தின் உருவாக்கத்திற்கு பின்னால் இருக்கும் திரைப்பட குழுவின் திறமை மற்றும் உழைப்புக்குஇது ஒரு சான்று. இந்த அங்கீகாரம் டிராக்டர் திரைப்படத்தை பரந்த பார்வையாளர்களைச் சென்றடைவதற்கும் மேலும் சிலவெற்றிகளை தொடவும் நிச்சயமாக அதிக வாய்ப்புகளைத் ஏற்படுத்தும். இந்த திரைப்பட குழுவினர் சர்வதேச பிரீமியர் அந்தஸ்துடன் கேன்ஸ் திரைப்பட விழாவின் சந்தைப் பிரிவுக்குச்செல்லவும், மேலும் பாரிஸில் வாழும் தமிழர்களுக்காக ஒரு சிறப்பு திரையிடல் நடத்தவும் திட்டமிட்டுஉள்ளனர்.