இராமநாதபுரம் மாவட்டம், குந்துகால் மீன்பிடி இறங்குதளம் பகுதியில் ரூ.1.87 கோடி மதிப்பில் புதிதாக கடல் மணல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள் 04.07.2020 அன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு, மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. அந்த வகையில், இராமநாதபுரம் மாவட் டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவித்திடும் வகையில் குந்துகால் பகுதியில் ரூ.70 கோடி மதிப்பில் புதிதாக மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இம்மீன்பிடி இறங்குதளமானது சுமார் 500 விசைப்படகுகளை நிறுத்திட ஏதுவாகவும், மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை சேமித்து வைத்திட குளிர்பதன சேமிப்பு கிடங்கு வசதிகள், சாலை வசதி, மீன் ஏலக்கூட வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந் துள்ளன. விரைவில் 100 சதவீதம் பணிகள் நிறைவேற்றப்பட்டு மீனவர்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
மேலும், மீன்பிடி இறங்குதளம் அமைப்பதனால் இப்பகுதியில் கடல் மண் அரிப்பு ஏற்படாமல் தடுத்திடும் வகையில் சுமார் 400 மீ. நீளத்திற்கு புதிதாக கடல் மணல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைப்பதற்கு ரூ.1.87 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த ஜுன் மாதம் தொடங்கி நடை பெற்று வருகின்றன. இப்பணிகளை துரிதமாக மேற்கொண்டு விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, மீன்வளத்துறை துணை இயக்குநர் திருமதி. எம்.வி.பிரபாவதி, உதவி செயற்பொறியாளர் (மீன்வளத்துறை) திரு.பெ.சிவக்குமார், வட்டாட்சியர் திரு.அப்துல் ஜபார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.எஸ்.நடராஜன், திரு.எம்.சண்முகநாதன் உள்பட அரசு அலுவலா;கள் உடனிருந்தார்கள்.