பகலறியானின்’ திரைப்படத்தின் காணொளி, வெள்ளோட்டம் விடப்பட்டது. எதிர்பாராத காட்சிகளும் திகிலூட்டும் காட்சிகளும் நிறைந்த இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி காட்சி தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முருகனின் இயக்கத்தில், லதா முருகனின் தயாரிப்பில் வெளிவர இருக்கும் “பகலறியான்”, தமிழ் படங்களில் முக்கியமானதாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வெற்றி, கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷயா கந்தமுதன் நாயகியாகவும், நடிகர் சாய் தீனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.**********
ஒரே இரவில் நடக்கும் கதை என்பதாலும், படத்தில் பல எதிபாராத காட்சிகள் இடம்பெறும் என்பதாலும் பரவலான ரசிகர்களின் கவனத்தை இத்திரைப்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விவேக் சரோவின் இசையில், அபிலாஷ் PMYன் ஒளிப்பதிவில் வெளிவர இருக்கும் பகலறியான் தமிழ் திகிலூட்டும் படங்களில் முக்கியமானதாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படத்திற்கான மூலக்கதை கிஷோர்குமார் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கோபி கருணாநிதி கலை வடிவமைப்பாளராகவும், ராம் குமார் சண்டை பயிற்சியாளராகவும் இத்திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.