இயக்குநர் கோபிநாத் நாராயணமூர்த்தியின் புதிய திரைப்பட நிறுவனம் மை கைண்டா ஃபிலிம்ஸ் துவக்கம்

கோபிநாத் நாராயணமூர்த்தியின் தாயார் கே கோதைநாயகி அவர்களின் பிறந்தநாளில், மை கைண்டா ஃபிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தை கோபிநாத் நாராயணமூர்த்தியின் குருநாதர்களான இயக்குநர்கள் மிலிந்த் ராவ், ஆர் கண்ணன், இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் பேரரசு மற்றும் பிரபல தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். புதிய திரைப்பட நிறுவனத்தின் பெயர் பலகையை கோபிநாத் நாராயண மூர்த்தி மற்றும் இணை இயக்குநர் கரிகாலன் பிரபலங்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.***********

இந்நிகழ்வில் மை கைண்டா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் படைப்பான ‘கோதையின் குரல்’ குறும்படம் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் அதை மிகவும் பாராட்டினர். தயாரிப்பாளர் கே ராஜன், இயக்குநர் மோகன் ஜி, இயக்குநர் எஸ் ஆர் பிரபாகர், தயாரிப்பாளர் இளஞ்செழியன் கே எம், தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராவ் (‘தங்க முட்டை’ மற்றும் ‘பங்காரு குட்டு’) உள்ளிட்டோர் படத்தை பெரிதும் பாராட்டினர். இதைத் தொடர்ந்து, 12 வயதே ஆன ஒரு பெண் குழந்தை சமுதாயத்தின் முக்கிய பிரச்சினை ஒன்று குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது தொடர்பான ‘கோதையின் குரல்’ குறும்படம் விரைவில் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்படுவதோடு முன்னணி ஓடிடி தளம் ஒன்றிலும் ஒளிபரப்பாக உள்ளது. அரசியலமைப்பின் முக்கியமான‌ தூண்களில் ஒன்றில் மாற்றத்தை இப்படம் பரிந்துரைக்கிறது. இந்தியாவில் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் மிக முக்கியமான கருத்து ஒன்றை இப்படம் வலியுறுத்துகிறது.

‘தங்க முட்டை’ படத்தில் நாயகனாக நடிக்கும் தெலுங்கு நடிகர் சம்பூர்ணேஷ் பாபுவுக்கு தமிழில் டப்பிங் பேசும் பிரபல நடிகர் சஞ்சீவ் அரசு அதிகாரியாக இந்த குறும்படத்தில் நடித்துள்ளார். நடிகை நளினி, பாப்பி மாஸ்டர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.