‘இந்தியன் 2’ படத்தின் வியாபார பணிகளை துவக்கியது லைகா நிறுவனம்

கமல்ஹாசனின் நடிப்பில்,  இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  ‘இந்தியன் 2.’ ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரன் மற்றும் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ இணைந்து தயாரிக்க,  உருவாகி வரும் இப்படத்தின் முன் அறிவிப்பு காணொளி வெளியிடப்பட்டு வரவேற்பைக் குவித்தது. ‘இந்தியன் 2′ திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஜூன் 1 ஆம் தேதி சென்னையில்  நடைபெறவுள்ளது எனவும் இப்படம் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது என்பதையும் உறுதி செய்தனர். இந்தியன் 2 படம் குறித்த இந்த அடுத்தடுத்த பதிவேற்றங்கள்  ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.*******