சென்னை, திருவொற்றியூர், அஞ்சுகம் நகர் 1வது தெருவைச் சேர்ந்த ராசய்யா, வ/29, த/பெ.பரமசிவம் என்பவர் H-8 திருவொற்றியூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். ராசய்யா கடந்த 11.06.2024 அன்று அதிகாலை, திருவொற்றியூர், அஜாக்ஸ் புதிய பேருந்து நிலையம் அருகில் நின்றிருந்தபோது, ஆட்டோவில் வந்த சுமார் 4 நபர்கள் ராசய்யாவிடம் தகராறு செய்து, அவர்கள் வைத்திருந்த கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். காயமடைந்த ராசய்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். இது குறித்து இறந்துபோன ராசய்யாவின் மனைவி கொடுத்த புகாரின் மீது H-8 திருவொற்றியூர் காவல் நிலையத்தில் கொலை உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
H-8 திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்
குழுவினர் தீவிர விசாரணை செய்த மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 1.முரளி, வ/33, த/பெ.மோகன், திருவொற்றியூர், 2.சாம் (எ) சாமுவேல், வ/25, த/பெ.ரூபன், திருவொற்றியூர், 3.ஜீவா (எ) ஜீவானந்தம், வ/24, த/பெ.வேதாச்சலம், திருவொற்றியூர் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 3 கத்திகள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில் கைது செய்யப்பட்ட 3 நபர்களும் ஆட்டோ ஓட்டுநர்கள் என்பதும், இறந்துபோன ராசய்யா சில நாட்களுக்கு முன்பு இவ்வழக்கின் எதிரி முரளி என்பவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து தாக்கியுள்ளார், இந்த முன்விரோதம் காரணமாக முரளி அவரது நண்பர்களுடன் சேர்ந்து ராசய்யாவை சம்பவயிடத்தில் கத்தியால் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும் H-8 திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகயிருந்த ராமச்சந்திரன், வ/31, த/பெ.சுப்பையா,
எண்.15/2D, டாக்டர் அம்பேத்கர் நகர், 2வது தெரு, திருவொற்றியூர், சென்னை
என்பவரை நேற்று (13.06.2024) கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் மீது 2 வழக்குகள் உள்ளதும், இவர்
M-8 சாத்தாங்காடு காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும்
தெரியவந்தது.