நானி நடிக்கும் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ படத்தின் பதாகை வெளியீடு

நடிகர் நானி – இயக்குநர் விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ திரைப்படத்தின் பதாகை  வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சூர்யா மற்ற கிழமைகளில் தோன்றும் புதிய பரிமாணம் இடம் பிடித்திருக்கிறது. “சூர்யா’ஸ் சாட்டர்டே’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள்- இதுவரை வெளியிட்ட விளம்பரங்களில் சூர்யா அல்லது  நானியை ஆக்ரோஷமான இளைஞனாகவே காட்சிப்படுத்தினர்.‌ ஆனால் அவர் சனிக்கிழமைகளில் மட்டுமே வன்முறையாளர். மற்ற நாட்களில் சூர்யாவின் தோற்றத்தை ரசிக்கவும், அவரது புதிய பரிமாணத்தை அனுபவிக்கவும்.. தற்போது அந்த கதாபாத்திரத்தின் இரண்டாம் பதாகையை  வெளியிட்டுள்ளனர்.‌ இந்த பதாகையில்  நானி நம் பக்கத்து வீட்டு பையனின் அவதாரத்தில், வசீகரிக்கும் புன்னகையுடன் தோன்றுகிறார். மேலும் அந்தப் போஸ்டரில் அவர் பைக் ஓட்டுவது போலும் உள்ளது. இப்படத்தில்  நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ். ஜே. சூர்யா, சாய் குமார் மற்றும் பலர். நடித்துள்ளார்கள்*******

தொழில்நுட்பக் குழு : எழுத்து & இயக்கம் : விவேக் ஆத்ரேயா தயாரிப்பாளர்கள் : டி வி வி தனய்யா & கல்யாண் தாசரி  தயாரிப்பு நிறுவனம் : டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்  இசை :  ஜேக்ஸ் பிஜாய் ஒளிப்பதிவு : முரளி. ஜி  படத்தொகுப்பு : கார்த்திகா ஸ்ரீனிவாஸ்  சண்டை பயிற்சி இயக்குநர் : ராம்- லக்ஷ்மன்  மக்கள் தொடர்பு : யுவராஜ்