அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்க்’ திரைப்படத்தின் இசை மட்டும் காணொளி வெளியீட்டு விழாவில் இயக்குநர் நடிகர் சிங்கம்புலி பாட்டுப்பாடி அசத்தினார். அவர் பேசும்போது, ”தனது முன் கதையை எல்லாம் சினிமாவில் சிரமப்பட்ட கதையை எல்லாம் சொன்னார்.தொடர்ந்து அவர் பேசும்போது, “நான் போட்டோ ஸ்டுடியோவில் பிலிம்களை டெவலப் செய்யும் இருட்டறையில் ஆறு மாதம் தங்கி இருந்தேன். ஒன்றுமே பார்க்க முடியாது. விளக்கு போட மாட்டார்கள் சின்ன சிவப்பு விளக்கு மட்டுமே எரியும்.எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது. இப்படி எல்லாம் சிரமப்பட்டுத் தான் சினிமாவுக்கு வந்தோம். இப்படிச் சிரமப்படுவது பிற்காலத்தில் நன்றாக இருப்பதற்காகத்தான். இந்தக் கதாநாயகன் தமன் வெளிநாட்டில் ஏர்லைன்ஸில் மாதம் 4 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர் .அதையெல்லாம் விட்டுவிட்டுச் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.*********
தமன் நன்றாக இருக்கிறார் நன்றாக நடிக்கிறார். அவருக்கு என்ன குறைச்சல்? இவ்வளவு நாள் தனக்காக அவர் காலத்தைச் செலவிட்டு உள்ளார். இனி அதற்குப் பலன் உண்டு.சினிமா அவரைக் கைவிடாது .ஏனென்றால் அவர் சினிமாவை நேசிக்கிறார். சினிமா இரண்டு பேருக்கு வாய்ப்பு கொடுக்கும். தலை சீவ முடியாத அளவிற்கு அடர்த்தியான முடி கொண்டவர்களுக்கும் தலையில் முடியே இல்லாது தலைசீவ வழியில்லாதவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும் .எனக்குப் பாட்டு பாடப் பிடிக்கும் ஆனால் டப்பிங் நடக்கும் போது நான் இடைவேளையில் பாடினால் விடவே மாட்டார்கள்.”என்று பேசியவர் ,சங்கீத ஜாதி முல்லை பாடலைப் பாடி அந்த விழாவுக்கு கலகலப்பூட்டினார்.