ராக்ஸ் நேசர் எண்டெர்டெய்மெண்ட் சார்பில், தயாரிப்பாளர் ராம் மணிகண்டன் தயாரிப்பில், இயக்குனர் அகஸ்டின் பிரபு இயக்கத்தில், அமர் ரமேஷ், அஜித் விக்னேஷ் நடிப்பில் நான்கு விதமான காலகட்டத்தில் நடக்கும், வித்தியாசமான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள படம் “சதுர்”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, தற்போது திரைவெளியீட்டு பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, இப்படத்தின் முன்னோட்டக் காணொளி காட்சி வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்படத்தில் அமர் ரமேஷ், அஜித் விக்னேஷ், தாமோதரன், ஜீவா ரவி, நக்கலைட்ஸ் செல்லா, சூர்யா, அர்னவ் ஹரிஜா, பிரதீப் அரி, கிரிஷ் பாலா, ஜெகன் கிரிஷ், பாய்ஸ் ராஜன், ராஜன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்*******
எழுத்து இயக்கம் : அகஸ்டின் பிரபு தயாரிப்பு: ராம் மணிகண்டன் பேனர்: ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மென்ட் நிர்வாகத் தயாரிப்பாளர் : D சக்திவேல் ஒளிப்பதிவு: ராம் T சந்தர் VFX மேற்பார்வையாளர்: அகஸ்டின் பிரபு. எடிட்டர்: கார்த்திக் செல்வம் இசையமைப்பாளர்: ஆதர்ஷ். மக்கள் தொடர்பு : A ராஜா