தனுஷ் இயக்கி நடித்துள்ள “ராயன்” திரைப்படம்

நடிகராக தனுஷின் 50வது திரைப்படம், இயக்குநராக அவரது இரண்டாவது படம் என மிகுந்த எதிர்பார்ப்புகள் மத்தியில் ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் தனுஷ், பிரகாஷ் ராஜ், செல்வராகவன், எஸ்.ஏ.சூர்யா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், ஆகியோர் ந்டித்துள்ளார்கள். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். தனுஷ் சிறுவயதாக இருக்கும்போது ஒருவரை கொலை செய்துவிட்டு தனது இரண்டு தம்பிகளுடனும் ஒரு தங்கையுடனும் சென்னைக்கு தப்பித்து ஒரு காய்கறி சந்தைக்கு வந்துவிடுகிறார். அவர்களை செல்வராகவன் பாதுகாத்து வளர்க்கிறார். மூவரும் பெரியவர்களாக ஆனதும் தனுஷ் சந்தையில் சாப்பாட்டுக் கடை வைத்து நடத்துகிறார். அந்த சந்தையில் சரவணனும் எஸ்.ஏ. சூர்யாவும் பெரும் தாதாக்களாக இருக்கிறார்கள். தாதா சரவணனிடம் தனுஷ் அடியாளாகவும் இருக்கிறார். இரண்டு தாதாக்களையும் சட்டப்படி சுட்டுக் கொல்ல போலீஸ் அதிகாரியாக பிரகாஷ்ராஜ் சென்னைக்கு மாற்றுதலாகி வருகிறார். பிரகாஷ்ராஜ் சுட்டுக் கொல்ல நினைக்கும் ரவுடிகள் ஒவ்வொருவர்களாக கொல்லப்படுகிறார்கள். அவர்களை யார்? எதற்காக? கொல்கிறார்கள் என்பதுதான் கதை. இப்படத்தில் ராயனாக வாழ்ந்திருக்கும் தனுஷ் இயக்குநராகவும் சாதிதிருக்கிறார். தம்பி தங்கையுடன் தென்றலாக தவிழ்ந்த தனுஷ் எதிரிகளிடம் புயலாக மாறி பாய்கிற காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. தான் கொல்ல நினைக்கும் ரவுடிகளை யார் கொல்கிறார்கள் என்ற துப்பறிவை உதட்டின் சிரிப்பிலேயே காட்டிவிடுகிறார் பிரகாஷ்ராஜ். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை மீண்டும் மீண்டும் கேட்கும் ஆவலை தூண்டிறது. படத்தின் வெற்றிக்கு அவரது இசை பக்கபலமாக் உள்ளது.