இந்திய சுதந்திர ஏக்கத்தை சுமந்து சென்ற படகு “போட்”

பிரபா பிரேம்குமார் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு, கெளரி கிஷான், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா, நடித்து வெளிவந்திருக்கும் படம்”போட்”. இரண்டாம் உலக்ப் போரில் ஜப்பானின் குண்டுவீச்சிலிருந்து தப்புவதற்காக சென்னை கடற்கரையிலிருந்து மீனவனான யோகிபாபு தனது பாட்டியுடன் கடலுக்குள்  செல்ல படகில் ஏறுகிறார். அப்போது குண்டுவீச்சிலிருந்து உயிர்தப்பிக்க எம்.எஸ்.பாஸ்கர், ஜின்னி ஜெயந்த், கைக்குழந்தையும் கர்ப்பவதியுமான மதுமிதா, தனது பருவ வயது மகளுடன் சின்னி ஜெயந்த், ஷாரா, ஜெஸ்ஸி, அக்‌ஷத் என்ற வெவ்வேரு மாநிலத்தவர்களும் படகில் ஏறிக் கொள்கிறார்கள். படகு நடுக்கடலுக்குள் செல்கிறது. அதிகபேர் ஏறியதால் பழைய படகில் ஓட்டை விழுந்து படகுக்குள் தண்ணீர் புகுகிறது. அத்துடன் படகின் அருகாமையில் சுறா மீனும் சுற்றிச்சுற்றி வருகிறது. படகிலிருந்து 3 பேர் கடலில் குதித்தால்தான் படகு மூழ்காமல் மற்றவர்களும் உயிர் பிழைக்க முடியும் என்ற நிலையில் யார் கடலுக்குள் குதித்தார்கள். படகு கரை சேர்ந்ததா? என்பதுத்கான் மீதிக்கதை. படம் முழுவதும் படகு காட்சிதான். ஒரு படகை வைத்து இந்திய சுதந்திர தாகத்தை வெளிபடுத்திய இயக்குநர் சிம்பு தேவனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நகைச்சுவை நடிகராக பிரமளித்க்துக் கொண்டிருக்கும் யோகிபாபு கதாநாயகனாக மிளிர்கிறார். நேர்த்தியான அமைதியான நடிப்பை கொடுத்து அசத்துகிறார். சுதந்திரப் போராட்டத்தின் போது படகிலிருக்கும் பல இனத்தவர்களின் குணாதியசங்களை குத்திகாட்ட இயக்குநர் சிம்புதேவன் தயங்கவில்லை. வீரத்தின் விளைநிலத்தில் நின்று மார்தட்டுகிறார்.