“வாஸ்கோடாகாமா” திரைப்பட விமர்சனம்

நகுல் ,அர்த்தனா பினு, கே. எஸ். ரவிக்குமார், வம்சி கிருஷ்ணா, ஆனந்தராஜ், பிரேம்குமார்,முனீஷ்காந்த் ராம்தாஸ், ரமா, மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதன்பாப், நமோ நாராயணா ,ஆர். எஸ் .சிவாஜி, லொள்ளு சபா சேஷு  ,பயில்வான் ரங்கநாதன் , படவா கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். சதீஷ்குமார் என். எஸ். ஒளிப்பதிவு செய்துள்ளார்.அருண் என்.வி இசையமைத்துள்ளார்.5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். இதில் விரோதங்களும் குரோதங்களும் துரோகங்களும் அதிகரித்து இருப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு இதே நிலை எப்படி மாறி இருக்கும் என்கிற ஒரு கற்பனை தான் இந்தப் படம். படத்தின் கதை.   கதாநாயகி அர்த்தனா பினு நல்லவர். ஒரு நல்லவரை விரும்பி, திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இருப்பவர்.அவருடைய அப்பா ஆனந்தராஜ் ,தனது பெண்ணுக்கு ஒரு அக்மார்க் அயோக்கியனையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஏனென்றால் நாட்டில் நல்லவர்களுக்கு இடம் இல்லை.  ஆனால் நல்லவரான நகுலை, அர்த்தனா   விரும்புகிறார். தந்தை சொற்படி கேட்பது போல் நம்ப வைத்து திருமணமும் நடக்கிறது. இதற்கிடையில் நல்லவரான நகுல் சிறைக்குச் செல்கிறார். அங்கே சிறையில் அநியாயக்காரர்களுக்கும் நல்லவர்களுக்கும் நடக்கும் முரண்பாடுகளையும்  தர்ம, அதர்மங்களையும் கலந்து நகைச்சுவை முலாம் பூசி காட்சிகள் அமைத்து முழுப் படமாக எடுத்திருக்கிறார்கள். இசை அதிக இரைச்சலுடன் படம் முழுக்க ஒலிப்பதால் கதையை ரசிக்க முடியவில்லை. நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடவிட்டனரே.