ஆஹா தமிழ், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “வேற மாறி ஆபிஸ்” 

ஆஹா தமிழ், தனது பிரபலமான  வெப் சீரிஸான  “வேற மாறி ஆபிஸ்” சீரிஸின் 2வது சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.   கனா புரடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த சீரிஸின் இரண்டாவது சீசன் விரைவில்,  ஆஹா தமிழில் பிரீமியராகவுள்ளது. தமிழ் ஓடிடியில் தினசரி தொடராக 50+ எபிசோட்களை எட்டி, சாதனை படைத்த  இந்த சீரிஸ், கார்ப்பரேட் அலுவலகத்தின் அனுபவங்கள், வித்தியாசமான கதை சொல்லல், எனப்  பார்வையாளர்களின் இதயங்களை ஈர்த்தது. நடிகர்கள் RJ விஜய், சௌந்தர்யா நஞ்சுண்டன், VJ பார்வதி, ஜனனி அசோக் குமார், சியாமா ஹரிணி, RJ சரித்திரன், விக்கல்ஸ் விக்ரம் மற்றும் VJ பப்பு உள்ளிட்ட திறமையான நடிகர்கள் நடித்திருந்த  சீசன் 1, கார்ப்பரேட் வாழ்க்கையின் சவால்கள் மற்றும் வினோதங்களைப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது. ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த கதாபாத்திரங்கள் சீசன் 2 இல் மீண்டும் வருகிறது, இது ரசிகர்கள் விரும்பும் வசீகரத்தையும், நகைச்சுவையையும் அள்ளித் தரவுள்ளது.***********

சமீபத்தில் வெளியிடப்பட்ட “வேற மாறி ஆபிஸ்”  சீரிஸின்  சீசன் 2   டீசர், இந்த சீரிஸில் ரசிகர்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம், என்னவெல்லாம் இருக்குமென்பதை, செம்ம கலாட்டாவுடன் சிரிக்கச் சிரிக்க வெளிப்படுத்தியது. ரசிகர்களை இந்த சீரிஸ் சீட்டின் நுனியில் அமர வைக்கும், பரபர திருப்பங்களுடன்,  ஸ்டார்ட்அப் கலாச்சாரத்தின் உலகத்தை ஆராயும்,  வகையில்,  அனைவரும் ரசிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் சீசன்  நடிகர்கள் தவிர, புதிய சீசனில் நான்கு புதிய பயிற்சியாளர்களை அறிமுகப்படுத்துகிறது.  நடிகர்கள் ரவீனா தாஹா, ஜெய்சீலன், சப்னா ஐயர் மற்றும் விஸ்வ மித்ரன் ஆகியோர் புதிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். காதல், நட்பு, பரபரப்பு என இன்றைய ஐடி உலக இளைஞர்களின் வாழ்வை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தும், “வேற மாறி ஆபிஸ்”  சீரிஸின்  சீசன் 2-வை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  பிரீமியர் தேதிக்காக ஆஹா தமிழுடன் இணைந்திருங்கள் மற்றும்  “வேற மாறி ஆபிஸ்”  சீரிஸின்  சீசன் 2 வில் மற்றொரு பரபரப்பான பயணத்திற்குத் தயாராகுங்கள்!