இந்தியக் கடல்சார் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை வழங்க உள்ளனர்

இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் (ஐஎம்யு) 2024, ஆகஸ்ட் 5 அன்று மும்பை கிரிக்கெட் சங்க பொழுதுபோக்கு மையத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பையும் தொழில்துறை சந்திப்பையும் நடத்தியது. இதில் அதன் முன்னாள் மாணவர்களும், கடல்சார் தொழில்துறை தலைவர்களும் கலந்து கொண்டனர்.  இந்த சந்திப்பு பல்கலைக்கழகத்தின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.  இதில் கல்வி, ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்தும் இரண்டு முக்கிய கூட்டமைப்புகளின் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

ஒரு ஒப்பந்தம், ஐஎம்யு, ஃபோர் சைட் குழுமத்தின் துணை நிறுவனமான ஆர்கே மெஹ்ரோத்ரா ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இடையே கையெழுத்தானது. இந்தக் குழுமத்தை ஐஎம்யு முன்னாள் மாணவரான டாக்டர் ரவி மெஹ்ரோத்ரா நிறுவினார். இந்தக் குழுமம் 1.5 மில்லியன் அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்க உறுதியளித்துள்ளது. இதன் மூலம் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் கொல்கத்தா வளாகத்தில் கடல்சார் விவகாரங்களில் டாக்டர் ரவி மெஹ்ரோத்ரா சிறப்பு மையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.   கடல் பகுதியில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், ஆய்வுகள், கண்டுபிடிப்பு திறன்களை மேம்படுத்துவதில் இந்த மையம் கவனம் செலுத்தும்.  ஐஎம்யு துணைவேந்தர் டாக்டர் மாலினி வி சங்கர், ஃபோர் சைட் குழுமத்தின் இயக்குநரும் துணைத் தலைவருமான  அமுல்யா மொஹபத்ரா ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர். மற்றொரு சிறப்பம்சமாக, ஐஎம்யுவில் ஆராய்ச்சிப் படிப்பைத் தொடரும் இரண்டு இளநிலை ஆராய்ச்சி மாணவர்களுக்கு ரூ.18 லட்சம் நிதியுதவி வழங்குவதற்காக இந்தியக் கடல்சார் பொறியாளர்கள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், கடல்சார் துறையில் வளர்ந்து வரும் ஆராய்ச்சி திட்டங்களை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாக்டர் மாலினி சங்கர், துணைவேந்தர் .  ஐஎம்யு, திரு ராஜீவ் நய்யர், தலைவர் ஐஎம்இ (ஐ) ஆகியோர் கையெழுத்திட்டனர்.

 “கடற்படை துறையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தை ஆதரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று திரு ஆர்.கே. மெஹ்ரோத்ரா கூறினார்.