சென்னை பெருநகர போக்குவரத்து காவல் “விபத்தில்லா விழிப்புணர்வு நாள்” பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா தலைக்கவசம் விநியோகித்தல்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர்ZAD (Zero Accident Day) விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, இரு சக்கர வாகன ஓட்டிகளிடையே தலைக்கவசம்அணிவதன் முக்கியத்துவத்தினை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய முயற்சியாக அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 1,000 தலைக்கவசங்களை (Helmet) விநியோகித்துள்ளது. இந்த முயற்சியானது, சென்னைபெருநகரில் பாதிக்கப்படக் கூடிய வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதே சென்னை பெருநகரபோக்குவரத்து காவல்துறையினரின் முக்கியமான ஒரு பகுதியாகும்.

ஆகஸ்ட் 7, 2024 நிலவரப்படி, சென்னை பெருநகரபோக்குவரத்து காவல்துறையினரால்  தலைக்கவசம்அணியாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு எதிராக 1,53,341வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் பின்னிருக்கையில்அமர்ந்து பயணம் செய்யும் நபர்களுக்கு எதிராக 1,04,721 வழக்குகளும் பதிவு செய்துள்ளது. வாகன ஓட்டிகள் 90% தலைக்கவசம் அணிந்து செல்லும் விகிதம் இருந்தபோதிலும், பின்னிருக்கையில அமர்ந்து பயணம் செய்யும் நபர்கள் 63% மட்டுமே தலைக்கவசம் அணிந்து விதிமுறைகளை கடைபிடிக்கின்றனர். அச்சுறுத்தும் வகையில், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்களிடையே மிகக் குறைந்த விகிதத்தில்காணப்படுகிறது.

குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தலைக்கவசம் உபயோகத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியத்தை உணர்ந்து, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர்ஆகஸ்ட் 8 2024 அன்று   மாநில பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைக்கவசம் (Helmet) வழங்கும்,நிகழ்வை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியின் போது, ​​போக்குவரத்து விதிமீறல்கள் இல்லாத நகரமாக சென்னையை மாற்றும் முக்கிய பொறுப்பை வலுப்படுத்தும் வகையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தலைக்கவசம் (Helmet) அணிவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர்தனது குடிமக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும்,சாலைப் பாதுகாப்பு குறித்த கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும்,உறுதியுடன் உள்ளது. இது போன்ற முன்முயற்சிகள் மூலம், இணக்கத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நகரத்தின் இளைஞர்களிடையே வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பானபழக்கங்களை மேம்படுத்துவதையே நாங்கள் விரும்புகிறோம்.