நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட ‘லாரா’ தலைப்பு பதாகை

சில ஆண்டுகளுக்கு முன்பு  காரைக்காலில் நடந்த ஓர்  உண்மைச் சம்பவம்  சம்பவத்தை எடுத்துக் கொண்டு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி இருப்பது தான் ‘லாரா ‘.இப்படத்தை அறிமுக இயக்குநர் மணி மூர்த்தி இயக்கி உள்ளார். எம் கே அசோசியேட்ஸ் என்ற பெயரில் கோவையில் கட்டுமானத் துறையில் முத்திரை பதித்த தொழிலதிபர் கார்த்திகேசன் தனது எம். கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். இப்படத்தில்  அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரீ, வெண்மதி, வர்ஷினி என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் மேத்யூ வர்கீஸ் , கார்த்திகேசன், எஸ்.கே. பாபு ஆகியோர் நடித்திருக்கின்றனர்.  பரபரப்பு நிறைந்த மர்மங்கள் கொண்ட  புலனாய்வு என்று  இணைந்த வகைமையில் அமைந்த கதையே ‘லாரா ‘என்கிற விறுவிறுப்பான படமாக உருவாகியுள்ளது. தலைப்பு பதாகையை. நடிகர்  விஜய் சேதுபதி வெளியிட்டார்.