-ஷாஜஹான்-
சிவ கிலாரி தயாரிப்பில் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் விமல், கருணாஸ், மேரி ரிச்கெட்ஸ், ஆடுகளம் நரேன், தீபா சங்கர், சார்லஸ் வினோத், மனோஜ் குமார், பவன், அருள்தாஸ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “போகுமிடம் வெகுதுரமில்லை”. விமல் அமரர் இறுதி ஊர்தி ஓட்டுநர். கருணாஸ் கர்ணன் வேடம்போடும் தெருக்கூத்துக்கலைஞர். திருநெல்வேலியை சேர்ந்த செல்வந்தரான முதியவர் ஒருவர் சென்னை மருத்துவமனையில் இறந்துவிடுகிறார். அவரது உடலை இரவு நேரத்தில் அமரர் ஊர்தியில் எடுத்துக் கொண்டு திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 10 மணிக்குள் வந்துவிடுவதாக கூறி சென்னையிலிருந்து புறப்படுகிறார் விமல். திருச்சி நெடுஞ்சாலையில் வரும்போது மதுரையில் இறங்கிவிடுவதாக கூறி கருணாசும் அந்த ஊர்தியில் ஏறிக் கொள்கிறார். திருச்சியை தாண்டியதும் இரவு உணவுக்காக இருவரும் கீழே இறங்கிவிடுகிறார்கள். அப்போது பிணத்தை ஒரு கும்பல் கடத்தி எரித்துவிடுகிறார்கள். செவ்வாக்குமிக்கவரான இறந்து போனவரின் உடலுக்காக அவரது குடும்பத்தினர் திருநெல்வேலியில் காத்துக்கிடக்கிறார்கள். நடுவழியில் இறந்தவரின் உடல் இல்லாமல் விமலும் கர்ணாசும் தவிக்கிறார்கள். விமலுக்கு பிணம் கிடைத்ததா இல்லையா? எனதுதான் மீதிக்கதை? திரைக்கதைக்குத்தான் விமல் கதாநாயகன். ஆனால் கதையின் கருவுக்கு கதாநாயகன் கருணாஸ்தான். செஞ்சை நெருடவைக்கும் கதாபாத்திரம் கருணாசுக்கு. ஒரு திரைப்படத்துக்கு கதைதான் கதாநாயகன் என்பதை இப்படம் நிருபித்துள்ளது. உச்சக்கட்ட காட்சியில் கருணாசை நினைத்து விமல் ஆடும் காட்சியில் பார்வையாளர்களும் பரவசமடைகிறார்கள். படம் முடிந்ததும் திரையரங்கில் பாரவையாளர்களை எழுந்து நின்று கைத்தட்ட வைத்துவிட்டார் இயக்குநர் மைக்கேல் கே.ராஜா.