மலாயப் பல்கலைக் கழகத்தில்
மாபெரும் உலகப் பேரறிஞர் ;
எலாமும் தெளிந்த *வள்ளுவர்க்கே*
*இருக்கை* அமைக்க வேண்டுமென
மலேசியப் பிரதமர் *அன்வரிடம்*
மகிழ்வாய் *இந்தியப் பிரதமரும்*
சிலேடை இன்றி நேரடியாய்த்
சிறுகோ ரிக்கை முன்வைத்தார் !
_
‘”பிரதமர் *மோடி* விருப்பத்தைப்
பிரதமர் அன்வர் உடனேற்று
வரவேற் றுள்ளார் ; அவருக்கே
மனம்நி றைந்த நன்றியினைத்
தரவே மலேசிய இந்தியர்கள்
குறிப்பாய்த் தமிழர் அனைவருமே
கரவோ சையுடன் கூறினமே ;
காலத் தினால்செய் உதவியென்றே !
வான்புகழ் *வள்ளுவன் இருக்கைக்கு*
மண்புகழ் மலேசியம் அளித்திருக்கும்
தேன்மிகுந் துள்ள வாக்கதனால்
தென்றமிழ் நாட்டுத் தமிழர்களும்
தான்,பெரு நன்றியை நம்நாட்டுப்
பிரதமர் தமக்கே சொல்லிடுவார் ,
ஊனுடல் உயிர்,மனம் அனைத்திலுமே
ஒன்றிய *செம்மொழி தமிழினிலே!*
*இனத்தை ; மதம் ; மொழி ,* எதனையுமே
இம்மி யளவும் கலக்காமல்
மனித்தப் பண்பை, வாழ்முறையை
மாசு, மறுவறத் *தம்குறளில்*
தனித்த உணர்வுடன் செய்தளித்த
*தக்கார் வள்ளுவர்* புகழ்வளர
இனித்த மனத்தில் அவர்க்(கு)இருக்கை
எழுப்பும் *மலேசியம்* வாழியவே !
*பாதாசன்*