போதையின் கேடை விளக்கும் படம் “சாலா”

டி.ஜி.விஸ்வா பிரசாத் தயாரிப்பில் எஸ்.டி. மணிப்பால் இயக்கத்தில் தீரன், ரேஷ்மா வெங்கடேஷ், சார்லஸ் வினோத், ஶ்ரீநாத், அருள்தாஸ், சம்பத் ராம் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த்ருக்கும் படம் “சாலா”. கதாநாயகன் தீரன் மதுக்கடைகளை திறப்பதில் ஆர்வமுள்ளவர். கதாநாயகி ரேஷ்மா மதுக்கடைகளை மூடுவதற்கு போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர். இருவரும் எதிரும் புதிருமாக இருக்கும் இரண்டு தண்டவாளங்கள். இந்த தண்டவாளத்தில் காதல் ரயிலை ஓட்டுகிறார் இயக்குநர் மணிப்பால். காதல் நிறைவேறியதா? என்பதுதான் கதை. குஸ்தி பயில்வானின் கட்டுமஸ்தான உடல்கட்டை கொண்ட தீரன் குழந்தைகளின் அன்பில் குழைந்து கொஞ்சுவதில் நடிப்பின் முத்திரையை பதித்துள்ளார். ஒரே செடியில் இருக்கும் முள்ளும் மலரும் போல, தன் முகத்தில் போராட்ட ஆக்ரோஷத்தையும் காதலின் முன்முறுவலையும் அழகாக ரசிக்கும்படி காடுகிறார் ரேஷ்மா. போதையின் கொடூரத்தை அருள்தாஸ் உணரும் காட்சி, படம் பார்ப்பவர்கள் இனி மதுவை தொடவே மாட்டேன் என்றுன் நினைக்கிம் அளவுக்கு நடித்திருக்கிறார். இசையும் ஒளிப்பதிவும் காதுக்கும் கண்ணுக்கும் விருந்து படைத்திருக்கிறார்கள் இசையமைப்பாளர் தீசனும், ஒளிப்பதிவாளர் ரவீந்திரநாத் குருவும். போதையின் பயங்கரத்தை காட்டுகிறது “சாலா”.