நடிகர் சங்க கட்டிட நிதிக்காக வெளிநாட்டில் கலை நிகழ்ச்சி ஆலோசனை

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணிகளுக்காக வெளிநாட்டில் கலை விழா ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழா குறித்து ஏற்கனவே மூத்த நடிகர் ரஜினிகாந்திடம் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் மூத்த நடிகரும் நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினருமான நடிகர் கமல்ஹாசனிடம் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.