சனாதான மாநாடு நடத்திய திமுக, பாஜகவை திருப்திப்படுத்துவதற்காக பழனியில் முருகன் மாநாட்டை நடத்தி உள்ளது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை எம்.எஸ்.நாயுடு தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வடசென்னை தெற்கு மாவட்டம் இராயபுரம் பகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான டி. ஜெயகுமார் வழங்கினார். *பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்*

அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி மிகவும் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது என்றார். அதன் ஒரு பகுதியாக இன்று வட சென்னை தெற்கு கிழக்கு மாவட்டம் ராயபுரம் பகுதியில் உட்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது என தெரிவித்தார்.  ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னை புறநகர் பகுதிகளில் நடத்தி இருக்கலாம்.  சென்னையின் பிரதான பகுதிகளில் நடத்தி விட்டு,  மாநகராட்சி, நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து துறைசார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தினார்கள். விளையாட்டு துறை, அரசு துறை சார்ந்த அதிகாரிகள் இதில் தொடர்ந்து கவனம் செலுத்தினார்கள்.  ஒட்டுமொத்தமாக ஒரு மாத காலமாக முழுக்க முழுக்க அரசு நிர்வாகமும் சரி, அரசு கீழே இருக்கக்கூடிய நிர்வாகமும் சரி மாநகராட்சியும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தான் கவனம் செலுத்தினார்கள் என்றார்.

குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. மழைநீர் வடிகால்வாய், பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது, செப்டம்பர் அக்டோபர் நவம்பரில் மூன்று மாதத்திற்கு மழை உள்ளது.  முன்னேற்பாடான நடவடிக்கைகள் மாநகராட்சி தரப்பில் அரசு தரப்பிலோ கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு கார் பந்தயத்தில் முழுமையான கவனத்தை செலுத்தி பத்தாயிரம் பேர் அவர்களுடைய மகிழ்ச்சிக்காக பத்து லட்சம் பேரை சித்திரவதை செய்தார்கள் என குற்றம்சாட்டினார். முகத்துவாரத்தை தூர் வருவது, கொசஸ்தலை ஆறு இந்தப் பகுதிகளில் நீர் செல்லுமாறு தூர்வாரி சரி செய்ய வேண்டிய எண்ணம் அரசுக்கு இல்லை என்று குற்றம்சாட்டிய அவர், அரசு அதை செய்ய தவறி விட்டு, முழுக்க முழுக்க கார் பந்தயத்தில் தான் கவனம் செலுத்தி இருக்கிறார்கள் என்றார். பல சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் வழுக்கி விழக்கூடிய சூழல்தான் உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக் கோட்டையில் நடத்தலாம் இங்கு நடத்த வேண்டிய அவசியம் என்ன எனவும் இதனால் பல லட்சம் மக்களை கஷ்டப்படுத்தி இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். கார் ரேஸ் மிகப்பெரிய வெற்றியடைந்தது போல் உதயநிதி பேசுகிறார். FIA சான்றிதழ் முன்னாடியே வாங்க வேண்டும் ஆனால் எல்லாம் தயார் செய்து விட்டு சான்றிதழ் வாங்குகிறார்கள் முதல் நாள் பயிற்சி போட்டி மட்டும்தான் நடந்தது.  ஏற்கனவே 48 கோடி செலவு செய்தார்கள் அந்த பணத்தை திருப்பி கொடுத்து விட்டார்களா? எனவும் தற்பொழுது டிக்கெட் விலையும் அதிகம் அப்ப எவ்வளவு கோடி வந்திருக்கும் எவ்வளவு டிக்கெட் விற்பனை செய்துள்ளது அரசு என்ன செய்து இருக்கிறது காவல்துறை தான் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.  அவர்களுக்கு பேட்டா கொடுத்தார்களா கொடுக்கவில்லை திருடனை பிடிப்பதை விட்டுவிட்டு காவல் துறையில் உள்ள பணிகளை விட்டுவிட்டு கார் பந்தியத்தில் காவல்துறையினர் பாதுகாப்பிற்கு நிற்கின்றனர் எனவும் கூறினார்.

கார் பந்தயத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்களுக்கு பேட்டா கொடுத்தீர்களா மின்சார ஊழியர்களுக்கு ஏதாவது கொடுத்தார்களா? மாநகராட்சிக்கு எவ்வளவு பணம் கட்டியிருக்கிறார்கள் என்று வெளிப்படத் தன்மை இல்லை இதை எல்லாம் வெப்சைட்டில் போட வேண்டும் டிக்கெட் மூலம் எவ்வளவு வருமானம் வந்திருக்கிறது கார் பந்தயத்திற்கு  எவ்வளவு செலவு செய்துள்ளோம், இந்த வருமானத்தில் மின்சார துறைக்கு காவல் துறைக்கு அரசு ஊழியர்களுக்கு என்ன செய்துள்ளது போன்று வெளிப்படையான தகவல் கொடுக்க வேண்டும். இதில் எவ்வளவு கோடி சம்பாதித்தார்கள் யாருக்கு இந்த பணம் எல்லாம் போய் சேர்ந்தது. சரக்கடிக்கிற விளம்பரம் தான் அதிகமாக இருந்தது அரசு அதை ஊக்கப்படுத்துகிறதா எனவும் கேள்வி எழுப்பினார்.

வடசென்னை தென் சென்னை மக்கள் இந்த கார் பந்தயத்தால் ஒரு மாதமாக கடும் இன்னலுக்கு உள்ளாகின்றனர்.  மழைநீர் வடிகால்வாய் பணிக்கு எந்தவிதமான முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. இந்த அரசாங்கம் Careless அரசாங்கம் இது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.  அதிகாரத்தில் அரசாங்கம் இருக்கும் போது பெரிய அளவில் திரை பிரபலங்களை அழைத்து கார் பந்தயத்தை பற்றி பாராட்ட வேண்டும் என பேச வைக்கிறார்கள். எந்த காலத்திலும் கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் திமுக அரசு தூங்கு மூஞ்சி அரசாங்கமாக உள்ளது.

கர்நாடகா துணை முதலமைச்சர் இங்கு வந்து அதை பேசுகிறார். தமிழ்நாடு பாலைவனமாக மாறும் அதிமுக இதை ஒருபோதும் அனுமதிக்காது. நீர் வளத் துறை அமைச்சர் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்.  முதலமைச்சர் இங்கே இல்லை. கர்நாடக துணை முதலமைச்சர் இங்கே வந்திருந்த போது நீர்வளத்துறை அமைச்சர் போய் அவரை சந்தித்திருக்க வேண்டும்.  அதை சொல்வதற்கு கூட தமிழகத்தில் இங்கு ஆட்கள் இல்லை என்பது தான் வேதனையாக உள்ளது. முதலமைச்சர் அமெரிக்காவில் போட்டோ சூட் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு கார் டிரைவர் இல்லாமல் ஓடுகிறது இங்க பார்த்தால் எல்லாம் தள்ளு வண்டியாக உள்ளது. திருவொற்றியூர் தாசில்தார் வண்டியை தள்ளிக் கொண்டு செல்கிறார்கள். பேருந்துக்குள் குடை பிடித்து செல்லக்கூடிய சூழல்தான் உள்ளது இது தள்ளுவண்டி அரசாங்கம்.

மதசார்பற்ற நாடு மதசார்பற்ற மாநிலம் ஒரு மதத்திற்கு மட்டும் எப்படி மாநாடு நடத்தலாம் என்பது திமுக கூட்டணியின் கேள்வி,  திமுகவை பார்த்து மக்கள் என்ன கேள்வி கேட்கிறார்கள் மதத்தை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். படிப்பது ராமாயணம் இடிப்பது பிள்ளையார் கோவில் என்பது போல் திமுக செயல் படுகிறது. சனாதான மாநாடு நடத்திவிட்டு பாஜகவை திருப்தி படுத்துவதற்காக பழனியில் முருகன் மாநாடு நடத்தப்பட்டது.  திமுக கூட்டணிகளுக்கு இது பிடிக்கவில்லை எனவும் இதன் தாக்கம் வருகின்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி ஏற்படுமா என்கின்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  போகப்போக தெரியும் பூவின் வாசம் இல்லை இந்த சேற்றில் வாசம் என கூறினார். 2026 நெருங்க நெருங்க திமுக கூட்டணி கட்சிகள் இருக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கும் என தெரிவித்தார்.  இந்தியா ஜனநாயக நாடு தமிழ்நாட்டில் ஜனநாயகம் உண்டு யார் வேண்டுமானாலும் மாநாடு நடத்தலாம் யார் வேண்டுமானாலும் கட்சி நடத்தலாம் அப்படி இருக்கும்போது விஜயை கண்டு ஏன் திமுக பயப்படுகிறது?  விஜய் கட்சி ஆரம்பிக்கும் போது திமுகவுக்கு தான் பாதிப்பு ஏற்படும் அதன் ஓட்டு விஜய்க்கு சென்று விடும் என திமுக பயப்படுகிறது.  இது திமுகவின் எண்ணம் எனவும் திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவிற்கு தான் வரும் இது அடிப்படையான விஷயம் ஒவ்வொரு தேர்தலிலும் நடைபெறக்கூடிய விஷயம் வாக்குகள் சிதறாது என எங்களுக்கு அந்த நம்பிக்கை உள்ளது.  திமுக மீது கோபம் கொள்பவர்கள் சட்டமன்றத் தேர்தலில் பொருத்தவரை அதிமுக வாக்களிப்பார்கள் என கூறினார்.

அமைச்சர் வருகைக்காக பள்ளிகள் விடுமுறை அளிப்பது கேள்விக் கூத்தாக உள்ளது. பள்ளிக் கல்வித் துறையை பற்றி ஆளுநர் கருத்து கூறுகிறார். கருணாநிதி வரலாறு பாடப் புத்தகத்தில் உள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தமிழகத்திற்காக தியாகம் செய்தவர்கள் அப்படிப்பட்ட உடைய வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் இருக்கும்போது கருணாநிதி பற்றி உள்ளதால் ஆளுநர் அப்படி கூறுகிறார்.  பள்ளிகளில் பிள்ளைகள் சேர்க்கவில்லை என்பதை அறிய வேண்டுமே தவிர பள்ளிகளை மூடக்கூடாது மூடுவது  ஏற்புடையது அல்ல என தெரிவித்தார். டாஸ்மாக் கடைகளை திறந்து பள்ளிகளை மூடுவது தான் இந்த அரசு என தெரிவித்தார்.