அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகம் (CSIR) இன் ஒரு அங்கமான, CSIR-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (CSIR-SERC) சென்னை ஆய்வகமும், CSIR சென்னை வளாகமும் (CMC) இணைந்து, தேனி மாவட்டத்தில் அடல் டிங்கரிங் ஆய்வக தத்தெடுப்பு மற்றும் வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக ஜிக்யாசா ATL பட்டறையை (மாணவர்-விஞ்ஞானி இணைப்பு திட்டம்) ஏற்பாடு செய்திருந்தன.
இந்த நிகழ்ச்சி, தேனி மாவட்டத்தை சேர்ந்த கீழ்காணும் அரசு மேல்நிலை பள்ளிகளில் செப்டம்பர் மாதம் 4-5 தேதிகளில் நடத்தப்பட்டது:
1. அரசு மேல்நிலைப் பள்ளி, ஒக்கரைப்பட்டி (625517)
2. அரசு மேல்நிலைப் பள்ளி, சிலமரத்துப்பட்டி (625528)
3. அரசு மேல்நிலைப் பள்ளி, கொடுவிலார்பட்டி (625534)
4. அரசு மேல்நிலைப் பள்ளி, தருமபுரி (625533)
“ஜிக்யாசா” என்பது, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகம் (CSIR) அதன் பவள விழா கொண்டாட்ட ஆண்டில் தேசிய அளவில் எடுக்கப்பட்ட முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும். CSIR திட்டத்துடன் அதன் அறிவியல் சமூகப் பொறுப்பை மேலும் விரிவுபடுத்தி ஆழப்படுத்தும் நோக்கத்துடன் இத்திட்டத்தை தொடங்கியது.
இந்த திட்டமானது பள்ளி மாணவர்களையும் விஞ்ஞானிகளையும் ஒருங்கிணைத்து மாணவர்களின் வகுப்பறை கற்றலை நன்கு திட்டமிடப்பட்ட ஆராய்ச்சி ஆய்வக அடிப்படையிலான கற்றலுடன் இணைத்து விரிவுபடுத்துகிறது. இந்த திட்டம், பிரதமர் நரேந்திர மோடியின் புதிய இந்தியா மற்றும் அறிவியல் சமூகம் மற்றும் நிறுவனங்களின் அறிவியல் சமூகப் பொறுப்பு (SSR) பற்றிய பார்வையால் ஈர்க்கப்பட்டுள்ளது.
இந்த அறிவியல் பட்டறையின் போது பின்வரும் விஞ்ஞானிகள்/ விஞ்ஞான அலுவலர்கள் அறிவியல் விரிவுரைகள்/ நேரடி ளை நிகழ்த்தினர்