புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி திரட்ட இசை கச்சேரி நடத்தும் பரத்வாஜ்.

காதல் மன்னன், அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், பாண்டவர் பூமி, ரோஜாக்கூட்டம், ஜெமினி, ஆட்டோகிராப், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்,  அட்டகாசம், ஐயா, திருட்டுப் பயலே, முனி, அசல், அரண்மனை போன்ற படங்கள் உட்பட  50 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, மறக்க முடியாத  வெற்றி பாடல்களை கொடுத்து திரைத் துறையிலும் சரி, மக்கள் மனதிலும் சரி தமக்கென தனி இடம் பிடித்தவர் இசையமைப்பாளர் பரத்வாஜ். தற்போது சென்னையில் முதல் முறையாக இசையமைப்பாளர் பரத்வாஜின் இசைக்கச்சேரி  புற்று நோய் மருத்துவமனை நிதிக்காக  நடக்கவிருக்கிறது,***********

யோகா அறக்கட்டளை மற்றும் Zest Entertainment இணைந்து சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகில் உள்ள ” விங்ஸ் வர்த்தக மையம் ” செயிண்ட் ஜார்ஜ் விளையாட்டு மைதானத்தில் வருகிற அக்டோபர் மாதம் 19 ம் தேதி இந்த பிரம்மாண்டமான இசைக் கச்சேரியை நடத்தவிருக்கிறார்கள்.