கார்த்தி மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணையும் அடுத்த புதிய படத்தை அறிவித்துள்ளார்கள். இப்படத்திற்கு தற்காலிகமாக “கார்த்தி 29” என்று பெயரிட்டுள்ளார்கள். இப்படத்தினை தமிழ் இயக்குகிறார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விமர்சன ரீதியாக, பெரும் பாராட்டுக்களைக் குவித்த, “டாணாக்காரன்” மூலம் இயக்குநராக தமிழ் அறிமுகமானவர். இத்திரைப்படம் நேரடி டிஜிட்டல் வெளியீடாக வெளியான போதிலும், முன்னணி விமர்சகர்களிடமிருந்து, பெரும் பாராட்டுக்களைப் பெற்றதும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் பாராட்டுக்களையும் குவித்தது குறிப்பிடதக்கது. திரைப்படத்தினை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸுடன், இஷான் சக்சேனா, சுனில் ஷா மற்றும் ராஜா சுப்ரமணியன் தலைமையிலான ‘ஐவிஓய்’ என்டர்டெயின்மென்ட் மற்றும் ’பி ஃபோர் யு’ மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.******